google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: Masal Vadai / Masala vada / மசால் வடை / ஆமை வடை / ஆம வடை

Monday, July 27, 2009

Masal Vadai / Masala vada / மசால் வடை / ஆமை வடை / ஆம வடை

Masal Vadai / Masala Vaday / ama Vadai is an easy to prepare, energetic and tasty snack, taken with breakfast, tea, coffee or simply the vadai alone.





மசால் வடை

தேவையான பொருட்கள்:
  • கடலைப்பருப்பு - கால் கிலோ
  • பெரிய வெங்காயம் - 4
  • பச்சைமிளகாய் - 7
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • பூண்டு - 4 பல்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • கொத்துமல்லி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை சுத்தம் செய்யவும் .
  • சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வடிக்கவும்.
  • உப்பு சேர்த்து அரைகுறையாக அரைத்து மாவாக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
  • பச்சைமிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும்.
  • இஞ்சியையும் வெள்ளை பூண்டையும் லேசாக தட்டி நைத்துக்கொள்ளவும்.
  • சோம்பைத் தூள் ஆக்கவும்.
  • மாவில் எல்லாவற்றையும் சேர்த்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • அப்படிக் கலந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் ஒரு உருண்டையை எடுத்து இரு பக்கமாக அழுத்தி அதில் விடவும்.
  • சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும்.

கரகரப்பான, மொறுமொறுப்பான ஆம வடை / ஆமை வடை / மசால் வடை தயார்.

No comments: