நெல்லிக்கனிச் சோறு / நெல்லிக்காய் சாதம்
வைட்டமின் 'சி' சத்து நிறைந்து, ஆம்லா என்று ஹிந்தி மொழியிலும், அமலாகி என்று வடமொழியிலும் (சமஸ்கிருதம்), Indian Gooseberry என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுவது பெரிய நெல்லிக்காய் ஆகும். இளமையை நீட்டிக்கும் அரிய இக்காயகற்பத்தை (காயகல்பம் ) எங்ஙனமாயினும் உணவில்
சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.
இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைப்
போட்டுத் தாளிக்கவும்.
அதோடு துருவப்பட்ட தோப்பு நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்று சொல்லப்படும் பெரிய நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
Coconut milk kuruma / Thengai paal kuruma / kurma / kurmaa / korma / kormaa / khorma / khormaa is a very delicious easy to prepare side dish, taken with idli / idly, dosai / dosa, chapati / chapatti / chappaathi, purotta / parantha / barotta.
தேங்காய்ப் பால் குருமா
சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: தேங்காய்ப் பால்: இரண்டு கப் உருளைக்கிழங்கு; இரண்டு
சின்ன வெங்காயம்: பத்து
காரட்: இரண்டு
தக்காளி: இரண்டு
தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி பொட்டுக்கடலை: கால் கப் (இதை சிவகங்கைப் பகுதிகளில் பொரிகடலை என்பார்கள்.) முந்திரிப் பருப்பு: சுமார் பத்து பச்சைமிளகாய்: இரண்டு கசகசா: ஒரு தேக்கரண்டி
பட்டை: சிறிதளவு
லவங்கம்: சிறிதளவு
சோம்பு: சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக்கவும்.