google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: Indian Gooseberry Rice

Monday, January 25, 2010

Indian Gooseberry Rice

நெல்லிக்கனிச் சோறு / நெல்லிக்காய் சாதம்

வைட்டமின் 'சி' சத்து நிறைந்து, ஆம்லா என்று ஹிந்தி மொழியிலும், அமலாகி என்று வடமொழியிலும் (சமஸ்கிருதம்), Indian Gooseberry என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுவது பெரிய நெல்லிக்காய் ஆகும். இளமையை நீட்டிக்கும் அரிய இக்காயகற்பத்தை (காயகல்பம் ) எங்ஙனமாயினும் உணவில்
சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.


தேவையான பொருட்கள்:


  • வெந்த சோறு (வேக வைத்த சாதம்): 1 கோப்பை
  • நெல்லிக்காய்: 5 (துருவிக் கொள்ளவும்)
  • வறமிளகாய்: 5
  • கறிவேப்பிலை: 2 கொத்து
  • கடுகு: 1/4 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உளுத்தம்பருப்பு): 1/2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு: 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம்: 1/4 தேக்கரண்டி
  • முந்திரி: 1 தேக்கரண்டி
  • நிலக்கடலை: 1 தேக்கரண்டி
  • பொட்டுக்கடலை: 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்: 2 சிட்டிகை
  • நெய்: 2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்: 1 மேஜைக்கரண்டி
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:

  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைப்
    போட்டுத் தாளிக்கவும்.
  • அதோடு துருவப்பட்ட தோப்பு நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்று சொல்லப்படும் பெரிய நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இக்கலவையுடன் சற்றுமுன் ஆறிய சோற்றைக் கலக்கவும்; கிளறவும்.
  • இத்துடன் முந்திரியையும் , நிலக்கடலையையும், பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
விருப்பப்பட்ட சட்னியுடன் ருசித்துச் சாப்பிடவும்.

No comments: