google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: Deepavali laddu
Showing posts with label Deepavali laddu. Show all posts
Showing posts with label Deepavali laddu. Show all posts

Monday, October 18, 2010

Deepavali laddu

தீபாவளி லட்டு

தேவையான பொருட்கள்:

  • சீனி: 500 கிராம்
  • கடலை மாவு (புதிதாய் வாங்கிச் சல்லடையில் சலித்தது): 250 கிராம்
  • நெய்: 3 தேக்கரண்டி (3 டீ ஸ்பூன் )
  • முந்திரிப் பருப்பு: 50 கிராம்
  • ஏலக்காய்: சுமார் 10
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை : 20
  • சமையல் எண்ணெய்: 500 மில்லி  லிட்டர்

செய்முறை

  • முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும்.

  • ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.

  • அடுப்பில் ஒரு கனமான இருப்புச்சட்டியை வைத்து  சீனியைப் போடவும்.

  • சுமார் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  பாகு காய்ச்ச வேண்டும்பாகானது, கம்பி பதத்திற்கு இருக்கவேண்டும்.

  • அந்தப் பாகில் ஏலப்பொடி சேர்க்கவும். தேவைப்பட்டால்  சாப்பாட்டிற்கெனவே விற்கப்படும்  வண்ணப் பொடியைக் கொஞ்சமாகச் சேர்க்கவும்.

  • கடலை மாவை தோசை மாவு போல தண்ணீர் விட்டுக்  கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலி என்னும் இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரிகரண்டியை அதற்கு மேல் நீட்டிப் பிடித்து, மாவைக் கவனமாக ஊற்றவும்.

  • எண்ணெய்க்குள் உருவாகும் பூந்தியை பக்குவமாக வேக விடவும்.

  • வெந்ததும், அரித்து எடுத்து, சீனிப் பாகில்  கொட்டவும்.

  • முந்திரியையும் கிஸ்மிஸ்ஸையும்  நெய்யில் வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

  • கிளறவும்.

  • லேசான சூட்டில் லட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


Tuesday, September 22, 2009

Deepavali laddu / தீபாவளி லட்டு

இது எல்லோருக்கும் பிடித்த அருமையான சுவையான ஸ்வீட் ஆகும்.

தேவையான பொருட்கள்:


  • கடலை மாவு: இரண்டு கப்
  • சீனி: ஒன்றரை கப்
  • முந்திரிப் பருப்பு: பத்து
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை: பத்து
  • ஏலக்காய்ப் பொடி: கால் தேக்கரண்டி
  • சமையல் சோடா: ஒரு சிட்டிகை
  • நெய்: இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்: அரை லிட்டர்
  • கலர் (மஞ்சள்): ஒரு சிட்டிகை (விரும்பினால் மட்டும்)
  • உப்பு: ஒரு சிட்டிகை

செய்முறை:

  • கடலை மாவுடன் உப்பையும் சமையல் சோடாவையும் முக்கால் கப் தண்ணீரையும் சேர்த்து, தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, அரிகரண்டி உதவியுடன் மாவை ஊற்றி பூந்தி செய்து கொள்ளவும்.
  • மற்றொரு சட்டியில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் சீனியையும் ஏலக்காய்ப் பொடியையும், தேவைப்பட்டால் கலரையும் போட்டு சீனி நன்கு கரையும் வரை கிண்டவும்.
  • பின்பு அதில் பூந்தியைப் போட்டுக் கிளரவும்.
  • அதன் மேல் நெய்யில் வறுபட்ட கிஸ்மிஸ்ஸையும் முந்திரியையும் போட்டு, சூடு ஆறியதும் மிக்சியில் லேசாக ஒரு நொடி அரைத்து, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு வேண்டிய சைசில் உருண்டை பிடிக்கவும்.