Ramadaan Nonbu Kanji / Ramadan Nombu Ganji / Ramzan Nonbu Cangee / Nombu Conjee / Nonbu Kunji / Nonbu Porridge / Nonbu Gruel
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி: 500 கிராம்
- வெள்ளைப் பூண்டு: 1
- கடலைப்பருப்பு: 50 கிராம்
- வெந்தயம்: 2 தேக்கரண்டி
- இஞ்சி: இருவிரல் பருமன்
- சீரகப்பொடி: 2-3 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி: 1 டீ ஸ்பூன்
- மிளகாய்பொடி: அரை டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம்: 2
- கேரட்: பாதி
- தக்காளி: 2
- சமையல் எண்ணெய்: 50 மில்லி லிட்டர்
- பச்சை மிளகாய்: 2-3
- புதினா: ஒரு கொத்து
- மல்லித் தழை: ஒரு கொத்து
- எலுமிச்சை ஜூஸ்: 1 டி ஸ்பூன்
- தேங்காய்ப் பால்: 300 மில்லி லிட்டர்
- கொத்துக்கறி: 100 கிராம்
- உப்பு: தேவையான அளவு
- பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நீரில் அலசி வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- கொத்துக்கறியை நீரில் கழுவி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றைக் கலந்து வைக்கவும்.
- தக்காளியையும் வெங்காயத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
- புதினாவையும் , கொத்தமல்லியையும் காம்பு நீக்கவும்.
- பச்சை மிளகாய்களின் காம்புகளையும் நீக்கி விடவும்.
- கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- எஞ்சிய இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
- நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியைச் சேர்த்து மேலும் வதக்கவும்.
- கொத்துக்கறியையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
- நறுக்கப்பட்ட கேரட் துண்டுகளையும் முழு பச்சைமிளகாய்களையும் சேர்த்து வதக்கவும்.
- வதங்கும்போது சீரகப் பொடியையும் மஞ்சள் பொடியையும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
- மல்லித் தழையைத் தூவி, சட்டியைச்சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- நெருப்பைக் குறைக்கவும்.
- மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் அரிசியை மெதுவாகச்சேர்த்து சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
- அப்படிக் கொதிக்கும்போது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பிட்டு, அடிக்கடி கிளறவும்.
- தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து, கரைந்த அரிசியுடன் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
- நிறைவாக புதினா இலையைத் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.
இதுவே சுவையான நோன்புக் கஞ்சி செய்யும் முறையாகும்.