ஈரல் வறுவல்
தேவையான பொருட்கள்:
- ஆட்டு ஈரல்: கால் கிலோ
- சின்ன வெங்காயம்: நூறு கிராம்
- தக்காளி: இரண்டு
- வெள்ளைப் பூண்டு: இரண்டு
- மிளகாய்ப் பொடி: ஒரு தேக்கரண்டி.
- மிளகுப் பொடி: ஒரு தேக்கரண்டி.
- சோம்பு: ஒரு தேக்கரண்டி.
- மல்லிப் பொடி: அரை தேக்கரண்டி
- மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை: சிறிதளவு
- எண்ணெய்: தேவையான அளவு
- உப்பு: தேவையான அளவு
செய்முறை:
· வெள்ளைப் பூண்டை இடித்துக் கொள்ளவும்.
· இருப்புச்சட்டியில் எண்ணெயைக் காய விடவும். அதில் சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
· பின்பு வெங்காயத்தையும் பூண்டையும் சேர்க்கவும். அப்படியே நன்றாக வதக்கவும்.
· அத்துடன் தக்காளியைச் சேர்த்து மேலும் வதக்கவும்.
· மேலும் மிளகாய்ப் பொடியையும் , மல்லிப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும்.
· இப்போது ஈரலையும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
· தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
· தண்ணீர் வற்றிய பின் மிளகுப்பொடியைச் சேர்க்கவும்.
· சேர்த்து நன்றாகக் கிளறவும்.
· நிறைவாக , கறிவேப்பிலையைத் தூவி இறக்கி வைக்கவும்.
மிகவும் ருசியான இரும்புச் சத்து நிறைந்த உணவு இதுவாகும்.