Rock sugar rice, Kalkandu Rice, Kalkandu soru or Kalkandu Sadam
கல்கண்டு பாத்
தேவையான பொருள்கள்:
· பால்: ஒரு லிட்டர்
· பொடியாக்கப்பட்ட கல்கண்டு: மூன்று கப்
· ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
· முந்திரி: இரண்டு தேக்கரண்டி
· கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சை: இரண்டு தேக்கரண்டி
· அரிசி: இரண்டு கப்
· நெய்: ஒன்றரை கப், குங்குமப்பூ: பத்து கிராம்
· பச்சைக் கற்பூரம்:இரண்டு சிட்டிகை.
செய்முறை:
· குங்குமப்பூவை ஒரு கரண்டியளவு பாலில் ஊற வைக்கவும்.
· சிறிது நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுக்கவும்.
- அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைக்கவும்.
- ஊறவைத்த அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு ஊறிய அரிசியைக் கொதிக்கும் பாலுடன் சேர்த்து வேக விடவும்.
- தீயானது மிதமாகவே இருக்கட்டும்.
- வெந்தபின் சிறிது நெய் சேர்த்துக் குழைய விடவும். கல்கண்டைச் சேர்க்கவும்.
- கிண்டவும்.
- மேலும் நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிண்டிக்கொண்டே (கிளறிக் கொண்டே) இருக்கவும்.
- சோறு சுருண்டு விடும்.
- தீயிலிருந்து இறக்கி விடவும்.
- வறுபட்ட முந்திரி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் எல்லாவற்றையும் சேர்க்கவும். கிளறவும்.
சுவையான கல்கண்டு பாத் நறுமணத்துடன் ரெடி.
No comments:
Post a Comment