google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: April 2011

Friday, April 15, 2011

Liver fry


ஈரல் வறுவல்

தேவையான பொருட்கள்:
  • ஆட்டு ஈரல் கால் கிலோ
  • சின்ன வெங்காயம்: நூறு கிராம்
  • தக்காளி: இரண்டு
  • வெள்ளைப் பூண்டு: இரண்டு
  • மிளகாய்ப் பொடி: ஒரு தேக்கரண்டி.       
  • மிளகுப் பொடி:  ஒரு தேக்கரண்டி.       
  • சோம்பு: ஒரு தேக்கரண்டி.       
  • மல்லிப் பொடி அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை: சிறிதளவு
  • எண்ணெய்: தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:
·        வெள்ளைப் பூண்டை இடித்துக் கொள்ளவும்.
·        இருப்புச்சட்டியில் எண்ணெயைக் காய விடவும். அதில் சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
·        பின்பு  வெங்காயத்தையும்  பூண்டையும் சேர்க்கவும். அப்படியே  நன்றாக வதக்கவும்.
·        அத்துடன்  தக்காளியைச் சேர்த்து மேலும்  வதக்கவும்.  
·        மேலும் மிளகாய்ப் பொடியையும் , மல்லிப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும்.  
·        இப்போது ஈரலையும் உப்பையும் சேர்த்து  வதக்கவும்.  
·        தண்ணீர் ஊற்றி வேக விடவும். 
·        தண்ணீர்  வற்றிய பின் மிளகுப்பொடியைச் சேர்க்கவும்.
·        சேர்த்து நன்றாகக் கிளறவும். 
·        நிறைவாக , கறிவேப்பிலையைத் தூவி இறக்கி வைக்கவும்.

மிகவும் ருசியான இரும்புச் சத்து நிறைந்த உணவு இதுவாகும்.

Saturday, April 9, 2011

Rock candy rice

Rock sugar rice, Kalkandu Rice, Kalkandu soru or Kalkandu Sadam

கல்கண்டு பாத்

தேவையான பொருள்கள்:

·        பால்: ஒரு லிட்டர்
·        பொடியாக்கப்பட்ட கல்கண்டு: மூன்று  கப்
·        ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி 
·        முந்திரி: இரண்டு தேக்கரண்டி
·        கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சை: இரண்டு தேக்கரண்டி 
·        அரிசி: இரண்டு கப்
·        நெய்: ஒன்றரை கப்குங்குமப்பூ: பத்து  கிராம் 
·        பச்சைக் கற்பூரம்:இரண்டு சிட்டிகை.

செய்முறை:

·        குங்குமப்பூவை ஒரு கரண்டியளவு பாலில் ஊற வைக்கவும்.
·        சிறிது நெய்யில் முந்திரியையும்  திராட்சையையும் வறுக்கவும்.
  • அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடிப்பகுதி  கனமான பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைக்கவும்.  
  • ஊறவைத்த அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு ஊறிய அரிசியைக் கொதிக்கும்  பாலுடன் சேர்த்து வேக விடவும்.
  • தீயானது மிதமாகவே இருக்கட்டும்.
  • வெந்தபின் சிறிது நெய் சேர்த்துக் குழைய விடவும். கல்கண்டைச் சேர்க்கவும்.
  • கிண்டவும்.
  • மேலும் நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிண்டிக்கொண்டே (கிளறிக் கொண்டே) இருக்கவும்.
  • சோறு சுருண்டு விடும்.
  • தீயிலிருந்து இறக்கி விடவும். 
  • வறுபட்ட முந்திரி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் எல்லாவற்றையும் சேர்க்கவும். கிளறவும்.

சுவையான கல்கண்டு பாத் நறுமணத்துடன் ரெடி