தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து
தீபாவளியன்று நாம் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகளைச் சாப்பிடுவோம். நம் வீட்டு பதார்த்தங்கள் மட்டும் அல்லாது சுற்றியுள்ள வீட்டுப் பதார்த்தங்களையும் சாப்பிட நேரும். இதற்காகவே அக்காலத்தில் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து என்பதை ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்கள். இது அஜீரணத்தைப் போக்கி நல்ல செரிமானம் கொடுக்கும். அதிகாலையிலேயே ஒரு நெல்லிக்காய் அளவு இதைச் சாப்பிடக் கொடுப்பார்கள்.
தீபாவளி லேகியத்தைப் பலவிதங்களில் செய்வார்கள்.
மிகவும் சுருக்கமான முறை:
சுக்கை நன்கு பொடியாக்கி, சலித்து, அதில் வெல்லப் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் கலந்து உருட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது சாப்பிடலாம்.
மற்ற முறைகள்:
தேவையான பொருட்கள்:
இஞ்சி: ஒரு துண்டு
மல்லி (தனியா): ஒரு கப்
சீரகம்: அரை கப்
நெய்: மூன்று தேக்கரண்டி
வெல்லம்: ஒரு கப்
செய்முறை:
மல்லி, சீரகம்,இஞ்சி இம்மூன்றையும் தண்ணீர் விட்டு மிக நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை சேர்த்துக் கொதிக்க விட்டு, நெய்யைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்கவும். நன்கு இறுகியவுடன் இறக்கி, பத்திரப்படுத்திக் கொள்ளவும். (சிறிது ஏலக்காய் பொடியை, கடைசியாகத் தூவியும் இறக்கலாம். சூடு ஆறிய பின்பு தேன் கலந்தும் சாப்பிடலாம்.) சித்தரத்தை, ஜாதிக்காய், அதிமதுரம், மிளகு, ஓமம், சுக்கு, கண்டந்திப்பிலி போன்றவற்றையும் அரைக்கும்போது சேர்த்தால் நல்ல பயன் உண்டு.
No comments:
Post a Comment