தேவையான பொருட்கள்:
- கடலை மாவு: இரண்டு கப்
- சீனி: ஒன்றரை கப்
- முந்திரிப் பருப்பு: பத்து
- கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை: பத்து
- ஏலக்காய்ப் பொடி: கால் தேக்கரண்டி
- சமையல் சோடா: ஒரு சிட்டிகை
- நெய்: இரண்டு தேக்கரண்டி
- எண்ணெய்: அரை லிட்டர்
- கலர் (மஞ்சள்): ஒரு சிட்டிகை (விரும்பினால் மட்டும்)
- உப்பு: ஒரு சிட்டிகை
- கடலை மாவுடன் உப்பையும் சமையல் சோடாவையும் முக்கால் கப் தண்ணீரையும் சேர்த்து, தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
- இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, அரிகரண்டி உதவியுடன் மாவை ஊற்றி பூந்தி செய்து கொள்ளவும்.
- மற்றொரு சட்டியில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் சீனியையும் ஏலக்காய்ப் பொடியையும், தேவைப்பட்டால் கலரையும் போட்டு சீனி நன்கு கரையும் வரை கிண்டவும்.
- பின்பு அதில் பூந்தியைப் போட்டுக் கிளரவும்.
- அதன் மேல் நெய்யில் வறுபட்ட கிஸ்மிஸ்ஸையும் முந்திரியையும் போட்டு, சூடு ஆறியதும் மிக்சியில் லேசாக ஒரு நொடி அரைத்து, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு வேண்டிய சைசில் உருண்டை பிடிக்கவும்.
No comments:
Post a Comment