google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Recipes and Cooking Tips: November 2009
It is a tasty soup, prepared from the bottom leg portion of lamb.
ஆட்டுக்கால் சூப்:
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கால்: 2
- சின்ன வெங்காயம்: 6
- பூண்டு: 4 பல்
- மிளகு: 1 தேக்கரண்டி
- சீரகம்: 1 தேக்கரண்டி
- மல்லி (தனியா): 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை: 10
- உப்பு: தேவையான அளவு
செய்முறை:
- ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
நெத்திலி கருவாடு வறுவல்
தேவையான பொருட்கள்:
- நெத்திலி கருவாடு: 100 கிராம்
- பெரிய வெங்காயம்: 1
- தக்காளி: 2
- மிளகாய்த்தூள்: 1 தேக்கரண்டி (டேபிள்ஸ்பூன்)
- இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
- எண்ணெய்: தேவையான அளவு
- உப்பு: தேவையான அளவு
செய்முறை:
- கருவாட்டை நன்றாக மண் போக கழுவி சுத்தம் செய்யவும்.
- பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
- இருப்புச்சட்டி என்று அழைக்கப்படும் வாணலி என்ற கடாயில் எண்ணெயை ஊற்றி சூடேற்றி வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வதக்கவும்.
- தக்காளி சேர்க்கவும். வதக்கவும்.
- மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- சுமார் 250 மில்லி நீர் சேர்த்து, கருவாடு போட்டு நன்கு வேக வைக்கவும்.
- சுண்டச் சுருள நன்கு கிளறி இறக்கவும்.