It is a very delicious extract, added with cooked rice and taken with great pleasure. வற்றல் குழம்பு (வத்தக் குழம்பு) தேவையான பொருட்கள்:
புளி: எலுமிச்சையளவு
வெள்ளைப் பூண்டு: ஆறு பல்
சின்ன வெங்காயம்: 100 கிராம்
கறிவேப்பிலை: சிறிது
நல்லெண்ணெய்: கொஞ்சம்
வெந்தயம்: 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்:2 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1/4 தேக்கரண்டி
செய்முறை:
புளியைக் நீரில் ஊறப்போட்டு, கரைத்துக் கொள்ளவும்.
பூண்டை உரித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
இருப்புச்சட்டி என்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையைச் சிறிது ஊற்றி, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியபின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி விடவும்.
சோறு (சாதம்) சாப்பிடும் போது சாம்பாருக்கு அடுத்ததாக இந்த வற்றல் குழம்பு மிகவும் சுவை (ருசி) கூட்டும்.
பிறகு ரசம், பாயாசம், தயிர் அல்லது மோர் என்று சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதை நினைத்தாலே இனிக்கிறது.