அவல் பாயாசம்
இந்த இனிப்பான பாயாசம், உடனடியாகச் செய்யத்தக்கதாகும்.
தேவையான பொருட்கள்:
- அவல்: 1/2 கப்
- நெய்: சிறிதளவு
- பால்: 2 கப்
- சர்க்கரை: 1 1/2 கப்
- முந்திரி: பத்து அல்லது பதினைந்து
- திராட்சை: பத்து அல்லது பதினைந்து
- அவலை அரைகுறையாக அரைக்கவும்.
- அரைத்த அவலை நெய்யில் சிவக்க வறுக்கவும்.
- முந்திரிப் பருப்புகளையும் வறுக்கவும்.
- பாலைக் காய்ச்சவும்.
- கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டு, முந்திரியைப் போடவும்.
- கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சையையும் போட்டுக் கிண்டி விடவும்.
- மகிழ்வுடன் பரிமாறி அருந்தி மகிழவும்.
No comments:
Post a Comment