தேவையான பொருட்கள்:
- சேமியா - 100 கிராம்
- ஜவ்வரிசி - 100 கிராம்
- சீனி - 250 கிராம்
- முந்திரி - 15
- ஏலக்காய் - 5
- உலர்திராட்சை - 15
- நெய் - 50 கிராம்
- ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும்.
- சேமியாவைக் கொதிநீரில் போட்டு வேகவைத்து, வடிகட்டி, சூடாக இருக்கும் போது சுமார் பாதியளவு சீனியைக் கலக்கவும்.
- ஜவ்வரிசி வெந்த நீரில் சீனி கலந்த சேமியாவைச் சேர்த்துக் கிளறி, மீதமுள்ள சீனியையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- முந்திரியையும் கிஸ்மிஸ் என்னும் உலர்திராட்சையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
- ஏலக்காயைப் பொடியாக்கித் தூவவும்.
- அடுப்பில் இருந்து இறக்கவும்.
No comments:
Post a Comment