- கத்திரிக்காய்- 1/4 kg
- சின்ன வெங்காயம்- 4
- கறிவேப்பிலை- 2 கொத்து
- கடுகு- 1/2 டீஸ்பூன்
- எண்ணெய்-2 டீஸ்பூன்
- உப்பு- 1 டீஸ்பூன்
அரைக்க :
- தேங்காய் - அரைமுடி
- சீரகம்-1/4 டீஸ்பூன்
- மஞ்சத்தூள்- 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- சின்ன வெங்காயம்-2
செய்முறை :
- அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு முக்கால் பதமாக அரைத்து வைக்கவும்.
- கத்திரிக்காயை நான்காக நறூக்கி வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகைப் போட்டு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கத்திரிக்காயை போட்டு கிளறி அவை முழ்கும் வரைக்கும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். உப்பை சேர்க்கவும்.
- காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி உப்பை பதம் பார்த்து தேவையானால் சிறிது சேர்க்கவும்.
- கறிவேப்பிலையை மேலாக போட்டு இறக்கி விடவும்.
- சுவையான கத்திரிக்காய் அவியல் தயார்.
No comments:
Post a Comment