google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: October 2010

Wednesday, October 20, 2010

Cooking without fire: Beaten Rice or Flattened rice



நெருப்பில்லா சமையல்: அவல்

தீ இல்லாமல் சாப்பாடு

நெருப்பில்லாமல் நினைத்த நேரத்தில் உணவு செய்ய முடியுமா?


முடியும். இதோ!


அவல் 

தேவையானவை: 

·        அவல்: 250 கிராம்
  • தேங்காய்ப்பூ: ஒரு கைப்பிடி   
  • சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை:  50 கிராம்
  • ஏலக்காய் போடி: ஒரு சிட்டிகை 


செய்முறை:

·        அவலைச் சுத்தப்படுத்தி, சுமார் கால் மணி நேரம் ஊறப்போட்டு, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, கிளறினால்... சுவையான, சூடற்ற, எல்லோரும் விரும்பும் தரமான அவல் ரெடி.     

  • Beaten rice (Flattened rice)  is called aval in Tamil, and poha in Hindi.

Okra or okhra a Diwali sweet.

Deepavali Sweet

Okra


தீபாவளி இனிப்பு 


உக்காரை 


தேவையானவை:

  • கடலைப் பருப்பு - 1 கப்
  • வெல்லம் - 1 கப்
  • நெய் - 5 தேக்கரண்டி
  • ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை 
  • தேங்காய் துருவல் - 2 குழிக் கரண்டி 
  • முந்திரிப் பருப்பு - 5
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

  • கடலைப் பருப்பை நன்கு ஊறவைத்து, நீரை வடித்துவிட்டு, உப்புப் போட்டு நன்றாக அரைக்கவும். 

  • இருப்புச்சட்டியில் (அடி கனத்த பாத்திரம் அல்லது கடாய்) முந்திரிப்பருப்பை கொஞ்சமான நெய்யில் வறுக்கவும். அப்படியே தேங்காய்த் துருவலையும் வறுக்கவும்.

  • மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். பருப்பையும் சேர்க்கவும்.

  • மிதமான சூட்டில் தொடர்ந்து உதிர உதிரக் கிளறவும்.

  • அடுப்பில் வைக்கப்பட்ட மற்றொரு சட்டியில் ஒரு டம்ளர் நீரில் வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுத்து வடிகட்டவும்.

  • பருப்பையும் பாகையும் ஏலக்காய்ப் பொடியையும் ஒன்றாகக் கலக்கவும்.


வெகு சுவையான உக்காரை சுவைக்க ரெடி . 


Monday, October 18, 2010

Deepavali laddu

தீபாவளி லட்டு

தேவையான பொருட்கள்:

  • சீனி: 500 கிராம்
  • கடலை மாவு (புதிதாய் வாங்கிச் சல்லடையில் சலித்தது): 250 கிராம்
  • நெய்: 3 தேக்கரண்டி (3 டீ ஸ்பூன் )
  • முந்திரிப் பருப்பு: 50 கிராம்
  • ஏலக்காய்: சுமார் 10
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை : 20
  • சமையல் எண்ணெய்: 500 மில்லி  லிட்டர்

செய்முறை

  • முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும்.

  • ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.

  • அடுப்பில் ஒரு கனமான இருப்புச்சட்டியை வைத்து  சீனியைப் போடவும்.

  • சுமார் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  பாகு காய்ச்ச வேண்டும்பாகானது, கம்பி பதத்திற்கு இருக்கவேண்டும்.

  • அந்தப் பாகில் ஏலப்பொடி சேர்க்கவும். தேவைப்பட்டால்  சாப்பாட்டிற்கெனவே விற்கப்படும்  வண்ணப் பொடியைக் கொஞ்சமாகச் சேர்க்கவும்.

  • கடலை மாவை தோசை மாவு போல தண்ணீர் விட்டுக்  கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலி என்னும் இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரிகரண்டியை அதற்கு மேல் நீட்டிப் பிடித்து, மாவைக் கவனமாக ஊற்றவும்.

  • எண்ணெய்க்குள் உருவாகும் பூந்தியை பக்குவமாக வேக விடவும்.

  • வெந்ததும், அரித்து எடுத்து, சீனிப் பாகில்  கொட்டவும்.

  • முந்திரியையும் கிஸ்மிஸ்ஸையும்  நெய்யில் வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

  • கிளறவும்.

  • லேசான சூட்டில் லட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


Sunday, October 17, 2010

Nellikkaai thayir pachadi


Gooseberry curd pachadi
Gooseberry yogurt pachchadi
Nellikkaai thayir pachadi


நெல்லிக்காய் தயிர் பச்சடி 

தேவையானவை:

  • நெல்லிக்காய் / நெல்லிக்கனி: ஆறு 

  • தயிர்: ஒரு கப்

  • தேங்காய்த்துருவல்: கால் கப்

  • பச்சை மிளகாய்: இரண்டு 

  • இஞ்சித்துண்டு: ஒன்று 

  • உப்பு: வேண்டிய அளவு



தாளிக்க: 

  • கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 


செய்முறை:

  • நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி சிறு துண்டுகளாக்கி, அவற்றுடன் துருவப்பட்ட தேங்காயையும், ஒடிக்கப்பட்ட பச்சை மிளகாய்களையும், தோல் நீக்கப்பட்டதும் நசுக்கப்பட்டதுமான இஞ்சியையும் கலந்து நன்றாக அரைத்து, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கிளறவும். இது, தாளிக்காத பச்சடி ஆகும்.  

  • இருப்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ச்சி, கடுகு வெடிக்கச் செய்து, பெருங்காயம் சேர்த்துதாளிக்காத பச்சடியையும் ஒன்றாகக் கலந்து, கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விட்டால், அடடா வைட்டமின் சி நிறைந்த பச்சடி உங்கள் முன்னே!