தீபாவளி லட்டு
தேவையான பொருட்கள்:
- சீனி: 500 கிராம்
- கடலை மாவு (புதிதாய் வாங்கிச் சல்லடையில் சலித்தது): 250 கிராம்
- நெய்: 3 தேக்கரண்டி (3 டீ ஸ்பூன் )
- முந்திரிப் பருப்பு: 50 கிராம்
- ஏலக்காய்: சுமார் 10
- கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை : 20
- சமையல் எண்ணெய்: 500 மில்லி லிட்டர்
செய்முறை:
- முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும்.
- ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கனமான இருப்புச்சட்டியை வைத்து சீனியைப் போடவும்.
- சுமார் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகானது, கம்பி பதத்திற்கு இருக்கவேண்டும்.
- அந்தப் பாகில் ஏலப்பொடி சேர்க்கவும். தேவைப்பட்டால் சாப்பாட்டிற்கெனவே விற்கப்படும் வண்ணப் பொடியைக் கொஞ்சமாகச் சேர்க்கவும்.
- கடலை மாவை தோசை மாவு போல தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
- வாணலி என்னும் இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரிகரண்டியை அதற்கு மேல் நீட்டிப் பிடித்து, மாவைக் கவனமாக ஊற்றவும்.
- எண்ணெய்க்குள் உருவாகும் பூந்தியை பக்குவமாக வேக விடவும்.
- வெந்ததும், அரித்து எடுத்து, சீனிப் பாகில் கொட்டவும்.
- முந்திரியையும் கிஸ்மிஸ்ஸையும் நெய்யில் வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.
- கிளறவும்.
- லேசான சூட்டில் லட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
No comments:
Post a Comment