google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips

Friday, January 15, 2010

Coconut milk kuruma / Thengai paal kuruma

Coconut milk kuruma / Thengai paal kuruma / kurma / kurmaa / korma / kormaa / khorma / khormaa is a very delicious easy to prepare side dish, taken with idli / idly, dosai / dosa, chapati / chapatti / chappaathi, purotta / parantha / barotta.


தேங்காய்ப் பால் குருமா


சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:


தேங்காய்ப் பால்: இரண்டு கப்

உருளைக்கிழங்கு; இரண்டு

சின்ன வெங்காயம்: பத்து

காரட்: இரண்டு

தக்காளி: இரண்டு

தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலை: கால் கப்
(இதை சிவகங்கைப் பகுதிகளில் பொரிகடலை என்பார்கள்.)

முந்திரிப் பருப்பு: சுமார் பத்து

பச்சைமிளகாய்: இரண்டு

கசகசா: ஒரு தேக்கரண்டி

பட்டை: சிறிதளவு

லவங்கம்: சிறிதளவு

சோம்பு: சிறிதளவு



செய்முறை:


  • உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக்கவும்.


  • வெங்காயத்தைத் தோலுரிக்கவும்.


  • காரட்டையும் தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

  • தேங்காய்ப் பூ, பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, பச்சைமிளகாய், கசகசா ஆகியவற்றை மை போல ( விழுது போல) அரைக்கவும்.

  • இருப்புச்சட்டி என்று சொல்லப்படும் வாணலியில் எண்ணையைக் காய வைத்து பட்டை, லவங்கம், சோம்பு வறுக்கவும்.

  • அதோடு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

  • மேலும் நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காரட், தக்காளி சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும்.

  • இத்துடன் அரைத்த விழுதையும் கால் கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  • நிறைவாக, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கொதித்தவுடன் இறக்கி விடவும்.

மனநிறைவுடன் மகிழ்ச்சியாக உணவருந்தவும்.

Wednesday, December 23, 2009

Aval payasam

It is a quick and easy to prepare dessert.


அவல் பாயாசம்


இந்த இனிப்பான பாயாசம், உடனடியாகச் செய்யத்தக்கதாகும்.


தேவையான பொருட்கள்:


  • அவல்: 1/2 கப்

  • நெய்: சிறிதளவு

  • பால்: 2 கப்

  • சர்க்கரை: 1 1/2 கப்

  • முந்திரி: பத்து அல்லது பதினைந்து
  • திராட்சை: பத்து அல்லது பதினைந்து
செய்முறை:

  • அவலை அரைகுறையாக அரைக்கவும்.

  • அரைத்த அவலை நெய்யில் சிவக்க வறுக்கவும்.

  • முந்திரிப் பருப்புகளையும் வறுக்கவும்.

  • பாலைக் காய்ச்சவும்.

  • கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டு, முந்திரியைப் போடவும்.

  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சையையும் போட்டுக் கிண்டி விடவும்.

  • மகிழ்வுடன் பரிமாறி அருந்தி மகிழவும்.

Thursday, December 17, 2009

Cashew nut Pakkoda / Gaaju pakora

Cashew nut pakkoda is a very crispy and tasty snack.


முந்திரி பக்கோடா


தேவையான பொருட்கள்:



  • முந்திரிப் பருப்பு - 100 கிராம்

  • கடலை மாவு - 1 கப்

  • மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:


  • கடலை மாவில் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து, முந்திரிப் பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கட்டிபடாமல் பிசையவும்.




  • மிதமாக எரியும் அடுப்பில் இருப்புச்சட்டி என்னும் வாணலியை வைத்து எண்ணெய் விடவும்.
  • சூடேறியதும், பிசைந்து வைக்கப்பட்டுள்ள கலவையை உதிர்த்து தங்கமான நிறத்தில் வறுத்து அரிகரண்டியின் துணை கொண்டு முந்திரி பக்கோடாவை எடுக்கவும்.

Dessert without milk

பால் இல்லாத ஜவ்வரிசி பாயாசம்



தேவையான பொருட்கள்:



  • சேமியா - 100 கிராம்
  • ஜவ்வரிசி - 100 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • முந்திரி - 15
  • ஏலக்காய் - 5
  • உலர்திராட்சை - 15
  • நெய் - 50 கிராம்
செய்முறை:
  • ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும்.
  • சேமியாவைக் கொதிநீரில் போட்டு வேகவைத்து, வடிகட்டி, சூடாக இருக்கும் போது சுமார் பாதியளவு சீனியைக் கலக்கவும்.
  • ஜவ்வரிசி வெந்த நீரில் சீனி கலந்த சேமியாவைச் சேர்த்துக் கிளறி, மீதமுள்ள சீனியையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • முந்திரியையும் கிஸ்மிஸ் என்னும் உலர்திராட்சையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
  • ஏலக்காயைப் பொடியாக்கித் தூவவும்.

  • அடுப்பில் இருந்து இறக்கவும்.

Sunday, December 6, 2009

Vatral kuzhampu / vaththa kulampu

It is a very delicious extract, added with cooked rice and taken with great pleasure.


வற்றல் குழம்பு (வத்தக் குழம்பு)

தேவையான பொருட்கள்:
  • புளி: எலுமிச்சையளவு
  • வெள்ளைப் பூண்டு: ஆறு பல்
  • சின்ன வெங்காயம்: 100 கிராம்
  • கறிவேப்பிலை: சிறிது
  • நல்லெண்ணெய்: கொஞ்சம்
  • வெந்தயம்: 1/4 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்: 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள்:2 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள்: 1/4 தேக்கரண்டி


    செய்முறை:



  • புளியைக் நீரில் ஊறப்போட்டு, கரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • இருப்புச்சட்டி என்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையைச் சிறிது ஊற்றி, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியபின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி விடவும்.
    சோறு (சாதம்) சாப்பிடும் போது சாம்பாருக்கு அடுத்ததாக இந்த வற்றல் குழம்பு மிகவும் சுவை (ருசி) கூட்டும்.


பிறகு ரசம், பாயாசம், தயிர் அல்லது மோர் என்று சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதை நினைத்தாலே இனிக்கிறது.

Sunday, November 22, 2009

Lamb leg soup / Aattukkaal soup

It is a tasty soup, prepared from the bottom leg portion of lamb.

ஆட்டுக்கால் சூப்:

தேவையான பொருட்கள்:


  • ஆட்டுக்கால்: 2
  • சின்ன வெங்காயம்: 6
  • பூண்டு: 4 பல்
  • மிளகு: 1 தேக்கரண்டி
  • சீரகம்: 1 தேக்கரண்டி
  • மல்லி (தனியா): 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை: 10
  • உப்பு: தேவையான அளவு

செய்முறை:



  • ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  • மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.

Tuesday, November 17, 2009

Dry fish

நெத்திலி கருவாடு வறுவல்


தேவையான பொருட்கள்:


  • நெத்திலி கருவாடு: 100 கிராம்
  • பெரிய வெங்காயம்: 1
  • தக்காளி: 2
  • மிளகாய்த்தூள்: 1 தேக்கரண்டி (டேபிள்ஸ்பூன்)
  • இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
  • எண்ணெய்: தேவையான அளவு
  • உப்பு: தேவையான அளவு

செய்முறை:


  • கருவாட்டை நன்றாக மண் போக கழுவி சுத்தம் செய்யவும்.
  • பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
  • இருப்புச்சட்டி என்று அழைக்கப்படும் வாணலி என்ற கடாயில் எண்ணெயை ஊற்றி சூடேற்றி வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வதக்கவும்.
  • தக்காளி சேர்க்கவும். வதக்கவும்.
  • மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சுமார் 250 மில்லி நீர் சேர்த்து, கருவாடு போட்டு நன்கு வேக வைக்கவும்.
  • சுண்டச் சுருள நன்கு கிளறி இறக்கவும்.