google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: 2010

Wednesday, October 20, 2010

Cooking without fire: Beaten Rice or Flattened rice



நெருப்பில்லா சமையல்: அவல்

தீ இல்லாமல் சாப்பாடு

நெருப்பில்லாமல் நினைத்த நேரத்தில் உணவு செய்ய முடியுமா?


முடியும். இதோ!


அவல் 

தேவையானவை: 

·        அவல்: 250 கிராம்
  • தேங்காய்ப்பூ: ஒரு கைப்பிடி   
  • சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை:  50 கிராம்
  • ஏலக்காய் போடி: ஒரு சிட்டிகை 


செய்முறை:

·        அவலைச் சுத்தப்படுத்தி, சுமார் கால் மணி நேரம் ஊறப்போட்டு, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, கிளறினால்... சுவையான, சூடற்ற, எல்லோரும் விரும்பும் தரமான அவல் ரெடி.     

  • Beaten rice (Flattened rice)  is called aval in Tamil, and poha in Hindi.

Okra or okhra a Diwali sweet.

Deepavali Sweet

Okra


தீபாவளி இனிப்பு 


உக்காரை 


தேவையானவை:

  • கடலைப் பருப்பு - 1 கப்
  • வெல்லம் - 1 கப்
  • நெய் - 5 தேக்கரண்டி
  • ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை 
  • தேங்காய் துருவல் - 2 குழிக் கரண்டி 
  • முந்திரிப் பருப்பு - 5
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

  • கடலைப் பருப்பை நன்கு ஊறவைத்து, நீரை வடித்துவிட்டு, உப்புப் போட்டு நன்றாக அரைக்கவும். 

  • இருப்புச்சட்டியில் (அடி கனத்த பாத்திரம் அல்லது கடாய்) முந்திரிப்பருப்பை கொஞ்சமான நெய்யில் வறுக்கவும். அப்படியே தேங்காய்த் துருவலையும் வறுக்கவும்.

  • மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். பருப்பையும் சேர்க்கவும்.

  • மிதமான சூட்டில் தொடர்ந்து உதிர உதிரக் கிளறவும்.

  • அடுப்பில் வைக்கப்பட்ட மற்றொரு சட்டியில் ஒரு டம்ளர் நீரில் வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுத்து வடிகட்டவும்.

  • பருப்பையும் பாகையும் ஏலக்காய்ப் பொடியையும் ஒன்றாகக் கலக்கவும்.


வெகு சுவையான உக்காரை சுவைக்க ரெடி . 


Monday, October 18, 2010

Deepavali laddu

தீபாவளி லட்டு

தேவையான பொருட்கள்:

  • சீனி: 500 கிராம்
  • கடலை மாவு (புதிதாய் வாங்கிச் சல்லடையில் சலித்தது): 250 கிராம்
  • நெய்: 3 தேக்கரண்டி (3 டீ ஸ்பூன் )
  • முந்திரிப் பருப்பு: 50 கிராம்
  • ஏலக்காய்: சுமார் 10
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை : 20
  • சமையல் எண்ணெய்: 500 மில்லி  லிட்டர்

செய்முறை

  • முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும்.

  • ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.

  • அடுப்பில் ஒரு கனமான இருப்புச்சட்டியை வைத்து  சீனியைப் போடவும்.

  • சுமார் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  பாகு காய்ச்ச வேண்டும்பாகானது, கம்பி பதத்திற்கு இருக்கவேண்டும்.

  • அந்தப் பாகில் ஏலப்பொடி சேர்க்கவும். தேவைப்பட்டால்  சாப்பாட்டிற்கெனவே விற்கப்படும்  வண்ணப் பொடியைக் கொஞ்சமாகச் சேர்க்கவும்.

  • கடலை மாவை தோசை மாவு போல தண்ணீர் விட்டுக்  கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலி என்னும் இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரிகரண்டியை அதற்கு மேல் நீட்டிப் பிடித்து, மாவைக் கவனமாக ஊற்றவும்.

  • எண்ணெய்க்குள் உருவாகும் பூந்தியை பக்குவமாக வேக விடவும்.

  • வெந்ததும், அரித்து எடுத்து, சீனிப் பாகில்  கொட்டவும்.

  • முந்திரியையும் கிஸ்மிஸ்ஸையும்  நெய்யில் வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

  • கிளறவும்.

  • லேசான சூட்டில் லட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


Sunday, October 17, 2010

Nellikkaai thayir pachadi


Gooseberry curd pachadi
Gooseberry yogurt pachchadi
Nellikkaai thayir pachadi


நெல்லிக்காய் தயிர் பச்சடி 

தேவையானவை:

  • நெல்லிக்காய் / நெல்லிக்கனி: ஆறு 

  • தயிர்: ஒரு கப்

  • தேங்காய்த்துருவல்: கால் கப்

  • பச்சை மிளகாய்: இரண்டு 

  • இஞ்சித்துண்டு: ஒன்று 

  • உப்பு: வேண்டிய அளவு



தாளிக்க: 

  • கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 


செய்முறை:

  • நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி சிறு துண்டுகளாக்கி, அவற்றுடன் துருவப்பட்ட தேங்காயையும், ஒடிக்கப்பட்ட பச்சை மிளகாய்களையும், தோல் நீக்கப்பட்டதும் நசுக்கப்பட்டதுமான இஞ்சியையும் கலந்து நன்றாக அரைத்து, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கிளறவும். இது, தாளிக்காத பச்சடி ஆகும்.  

  • இருப்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ச்சி, கடுகு வெடிக்கச் செய்து, பெருங்காயம் சேர்த்துதாளிக்காத பச்சடியையும் ஒன்றாகக் கலந்து, கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விட்டால், அடடா வைட்டமின் சி நிறைந்த பச்சடி உங்கள் முன்னே!    



Thursday, August 12, 2010

ரம்ஜான் (ரமலான்) நோன்புக் கஞ்சி

Ramadaan Nonbu Kanji / Ramadan Nombu Ganji / Ramzan Nonbu Cangee / Nombu Conjee / Nonbu Kunji / Nonbu Porridge / Nonbu Gruel


தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி: 500 கிராம்
  • வெள்ளைப் பூண்டு: 1 
  • கடலைப்பருப்பு: 50 கிராம்
  • வெந்தயம்: 2 தேக்கரண்டி
  • இஞ்சி: இருவிரல் பருமன் 
  • சீரகப்பொடி: 2-3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி: 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்பொடி: அரை டீ ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்:  2
  • கேரட்: பாதி
  • தக்காளி: 2 
  • சமையல் எண்ணெய்:  50 மில்லி லிட்டர் 
  • பச்சை மிளகாய்: 2-3 
  • புதினா: ஒரு கொத்து
  • மல்லித் தழைஒரு கொத்து
  • எலுமிச்சை ஜூஸ்: 1 டி ஸ்பூன் 
  • தேங்காய்ப் பால்: 300 மில்லி லிட்டர் 
  • கொத்துக்கறி: 100 கிராம் 
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:



  • பச்சரிசிவெந்தயம்கடலைப் பருப்பு ஆகியவற்றை நீரில் அலசி வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.



  • கொத்துக்கறியை நீரில் கழுவி உப்புமஞ்சள்பொடிமிளகாய்பொடி ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். 




  • தக்காளியையும்  வெங்காயத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 



  • புதினாவையும் , கொத்தமல்லியையும்  காம்பு நீக்கவும். 


  • பச்சை மிளகாய்களின் காம்புகளையும்  நீக்கி விடவும்.



  • கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.



  • எஞ்சிய இஞ்சியையும்வெள்ளைப்பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.




  • சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.



  • நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியைச்  சேர்த்து மேலும் வதக்கவும்.



  • கொத்துக்கறியையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். 



  • நறுக்கப்பட்ட  கேரட் துண்டுகளையும் முழு பச்சைமிளகாய்களையும் சேர்த்து வதக்கவும்.



  • வதங்கும்போது சீரகப் பொடியையும்  மஞ்சள் பொடியையும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.



  • மல்லித் தழையைத் தூவிசட்டியைச்சில  நிமிடங்கள் மூடி வைக்கவும்.



  • நெருப்பைக் குறைக்கவும்.


  • மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.



  • கொதித்ததும் அரிசியை மெதுவாகச்சேர்த்து சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் கொதிக்க விடவும்.




  • அப்படிக் கொதிக்கும்போது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும்.


  • தேவையான அளவு உப்பிட்டுஅடிக்கடி  கிளறவும். 




  • தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்துகரைந்த அரிசியுடன் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.




  • நிறைவாக புதினா இலையைத் தூவிசட்டியை நன்கு மூடிவைக்கவும்.






இதுவே சுவையான நோன்புக் கஞ்சி செய்யும் முறையாகும்.





Wednesday, June 30, 2010

சத்துமாவு

  • கம்பு, கேழ்வரகு எனப்படும் கேப்பையாகிய ராகி, கோதுமை, பச்சரிசி, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, நிலக்கடலை என்றும் மணிலா என்றும் மல்லாட்டை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை, முந்திரி, பாதாம், ஏலக்காய், ஜவ்வரிசி, மக்காச் சோளம் இவை எல்லாவற்றையும் நூறு கிராம் வீதம் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியிலோ அல்லது மாவரைக்கும் மெஷினிலோ அரைத்துக்கொள்ளவும்.
  • ஆறிய பின் சலித்து கொள்ளவும்.
  • தேவைப்படும் போதெல்லாம் பாலில் காய்ச்சி அருந்தலாம்.

ஆடிக்கூழ்

தேவையான பொருட்கள்:
  • உளுத்தம் பருப்பு – 200 கிராம்
  • பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 150 கிராம்
  • நெய் – 150 கிராம்
  • தண்ணீர் – 400 மி.லி.
செய்முறை:
  • உளுத்தம் பருப்பை வாணலியில் சிவக்க வறுக்கவும்.
  • அத்துடன் அரிசியையும் சேர்த்து வறுக்கவும்.
  • ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, மாவைப் போட்டுக் குறைந்த தீயில் வறுத்து, கரைத்து வைக்கப்பட்டுள்ள வெல்லப் பாகை ஊற்றிக் கிளறவும்.
மிகவும் சுவையான ஆடிக்கூழ் இதுவேயாகும்.