google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: June 2010

Wednesday, June 30, 2010

சத்துமாவு

  • கம்பு, கேழ்வரகு எனப்படும் கேப்பையாகிய ராகி, கோதுமை, பச்சரிசி, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, நிலக்கடலை என்றும் மணிலா என்றும் மல்லாட்டை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை, முந்திரி, பாதாம், ஏலக்காய், ஜவ்வரிசி, மக்காச் சோளம் இவை எல்லாவற்றையும் நூறு கிராம் வீதம் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியிலோ அல்லது மாவரைக்கும் மெஷினிலோ அரைத்துக்கொள்ளவும்.
  • ஆறிய பின் சலித்து கொள்ளவும்.
  • தேவைப்படும் போதெல்லாம் பாலில் காய்ச்சி அருந்தலாம்.

ஆடிக்கூழ்

தேவையான பொருட்கள்:
  • உளுத்தம் பருப்பு – 200 கிராம்
  • பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 150 கிராம்
  • நெய் – 150 கிராம்
  • தண்ணீர் – 400 மி.லி.
செய்முறை:
  • உளுத்தம் பருப்பை வாணலியில் சிவக்க வறுக்கவும்.
  • அத்துடன் அரிசியையும் சேர்த்து வறுக்கவும்.
  • ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, மாவைப் போட்டுக் குறைந்த தீயில் வறுத்து, கரைத்து வைக்கப்பட்டுள்ள வெல்லப் பாகை ஊற்றிக் கிளறவும்.
மிகவும் சுவையான ஆடிக்கூழ் இதுவேயாகும்.

Wednesday, June 23, 2010

Pumpkin Sambar பூசணிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:


  • பூசணித்துண்டுகள்: 10
  • தக்காளி: 4
  • வேக வைத்த துவரம்பருப்பு: 4 கரண்டி
  • சாம்பார்பொடி: 2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி: 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம்: சிறிதளவு
  • புளி: எலுமிச்சை அளவு
  • எண்ணெய்: 1 டீஸ்பூன்
  • தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை
  • அலங்கரிக்க: கொத்தமல்லித்தழை
செய்முறை:


  • புளியை சுடுநீரில் கரைக்கவும்.
  • குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
  • அடுப்பை ஏற்றி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அத்துடன் பூசணித்துண்டுகள், தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
  • பாதி வெந்ததும் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
  • மீண்டும் புளியுடன் ஒரு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்துச் சேர்க்கவும்.
  • கொத்தமல்லியைக் கழுவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, June 8, 2010

உளுந்து களி

உளுந்து களி
தேவையான பொருட்கள்:
உளுந்து: 2 உழக்கு
வெல்லம் அல்லது கருப்பட்டி: ருசிக்கேற்ற அளவு
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
சுருக்கமான செய்முறை:

  • உளுந்தை நன்றாக வறுத்து மாவாக அரைத்து, சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை அல்லது கருப்பட்டியை பொடித்துப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வாசம் வருமளவு பாகாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி அந்த மாவில் கட்டியில்லாது கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  • இடையிடையில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கிளறி பளபளப்பாக வரும் போது தண்ணீரில் கைகளை நனைத்து தொட்டுப் பார்த்தால் ஒட்டாத போது இறக்கவும்.
  • சூடாக தேவைப்பட்டால் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிடவும்.
  • சுவை, சத்து அதிகம். முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

Wednesday, June 2, 2010

கத்திரிக்காய் அவியல்

தேவையான பொருட்கள் :


  • கத்திரிக்காய்- 1/4 kg
  • சின்ன வெங்காயம்- 4
  • கறிவேப்பிலை- 2 கொத்து
  • கடுகு- 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய்-2 டீஸ்பூன்
  • உப்பு- 1 டீஸ்பூன்


அரைக்க :


  • தேங்காய் - அரைமுடி
  • சீரகம்-1/4 டீஸ்பூன்
  • மஞ்சத்தூள்- 1/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • சின்ன வெங்காயம்-2


செய்முறை :


  • அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு முக்கால் பதமாக அரைத்து வைக்கவும்.

  • கத்திரிக்காயை நான்காக நறூக்கி வைக்கவும்.

  • சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.

  • வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகைப் போட்டு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கத்திரிக்காயை போட்டு கிளறி அவை முழ்கும் வரைக்கும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். உப்பை சேர்க்கவும்.
  • காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி உப்பை பதம் பார்த்து தேவையானால் சிறிது சேர்க்கவும்.

  • கறிவேப்பிலையை மேலாக போட்டு இறக்கி விடவும்.
  • சுவையான கத்திரிக்காய் அவியல் தயார்.