google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: Pumpkin Sambar பூசணிக்காய் சாம்பார்

Wednesday, June 23, 2010

Pumpkin Sambar பூசணிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:


  • பூசணித்துண்டுகள்: 10
  • தக்காளி: 4
  • வேக வைத்த துவரம்பருப்பு: 4 கரண்டி
  • சாம்பார்பொடி: 2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி: 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம்: சிறிதளவு
  • புளி: எலுமிச்சை அளவு
  • எண்ணெய்: 1 டீஸ்பூன்
  • தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை
  • அலங்கரிக்க: கொத்தமல்லித்தழை
செய்முறை:


  • புளியை சுடுநீரில் கரைக்கவும்.
  • குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
  • அடுப்பை ஏற்றி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அத்துடன் பூசணித்துண்டுகள், தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
  • பாதி வெந்ததும் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
  • மீண்டும் புளியுடன் ஒரு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்துச் சேர்க்கவும்.
  • கொத்தமல்லியைக் கழுவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

No comments: