google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips

Wednesday, July 29, 2009

Paruththi paal / paruthi pal / பருத்திப்பால்

It is also called Paruthi paal. Paruthi means cotton. Paal means milk. The extract of cotton seed is called paruthi paal. It is an energetic, tasty, refreshment and non alcoholic drink, liked by all.

Consumption of warm paruthi paal helps to get rid off common cold.


பருத்திப் பாலானது, மிகவும் சுவையானது. அது மட்டுமல்ல, சத்து நிறைந்தது.


தேவையானவை:



  • ப‌ருத்திக் கொட்டை - நூறு கிராம்

  • ப‌ச்ச‌ரிசி - ஒரு கைப்பிடியளவு

  • வெல்ல‌ம் -கால் கிலோ அல்லது சற்று மிகையாக

  • சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்

  • தேங்காய்த் துருவ‌ல் -இரண்டு டீஸ்பூன்


செய்முறை:


  • ப‌ருத்திக் கொட்டையை சுத்தப்படுத்தி ஊற‌வைத்து நன்றாக அரைத்துப் பால் எடுத்துக் கொள்ள‌வும்.

  • ப‌ச்ச‌ரிசியை ஊற‌வைத்து மாவாக அரைத்து கொள்ள‌வும்.

  • ப‌ச்ச‌ரிசி மாவையும் பருத்திப் பாலையும் க‌ல‌ந்து அடுப்பில் ஏற்றவும்.


  • தொடர்ந்து கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.

  • க‌ல‌வை கெட்டியாகப் பொங்கி வ‌ரும்.


  • இப்போது வெல்ல‌ம் சேர்த்துக் கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.

  • வெல்ல‌ம் க‌ரைந்த‌வுட‌ன் சுக்குப்பொடியையும் , தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.



  • மேலும் சிறிது கிள‌றிவிட்டு, சற்று நேர‌ம் சென்றதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

  • சூடாகப் பரிமாறவும்.

Tuesday, July 28, 2009

தமிழ் சமையல் குறிப்புகள்

·        வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவவும் அல்லது முன்பே சிறிது நல்லெண்ணையை கையில் தடவிக் கொள்ளவும்.

·        தேங்காயை உடைப்பதற்கு முன் தண்ணீரில் நனைத்தால் சரியாக உடையும்.

·        காலிபிளவர் சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு போட்டு அதில் சிறிது நேரம் மூழ்க வைத்தால் ஏதேனும் புழு இருந்தால் நீங்கி விடும்.

·        குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

·        அடை, வடை, தோசை போன்றவை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

·        சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு வேண்டிய புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

·        குலோப்ஜாமூன் செய்யும்போது கடினமாகி விட்டால், ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

Monday, July 27, 2009

Masal Vadai / Masala vada / மசால் வடை / ஆமை வடை / ஆம வடை

Masal Vadai / Masala Vaday / ama Vadai is an easy to prepare, energetic and tasty snack, taken with breakfast, tea, coffee or simply the vadai alone.





மசால் வடை

தேவையான பொருட்கள்:
  • கடலைப்பருப்பு - கால் கிலோ
  • பெரிய வெங்காயம் - 4
  • பச்சைமிளகாய் - 7
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • பூண்டு - 4 பல்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • கொத்துமல்லி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை சுத்தம் செய்யவும் .
  • சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வடிக்கவும்.
  • உப்பு சேர்த்து அரைகுறையாக அரைத்து மாவாக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
  • பச்சைமிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும்.
  • இஞ்சியையும் வெள்ளை பூண்டையும் லேசாக தட்டி நைத்துக்கொள்ளவும்.
  • சோம்பைத் தூள் ஆக்கவும்.
  • மாவில் எல்லாவற்றையும் சேர்த்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • அப்படிக் கலந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாகச் செய்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் ஒரு உருண்டையை எடுத்து இரு பக்கமாக அழுத்தி அதில் விடவும்.
  • சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும்.

கரகரப்பான, மொறுமொறுப்பான ஆம வடை / ஆமை வடை / மசால் வடை தயார்.

Sunday, July 26, 2009

Common ingredients in English, Hindi and Tamil தமிழ்

  • Almond - Badaam -Vadumai - வாதுமை
  • Asafoetida / Asafetida - Hing- Perungayam - பெருங்காயம்
  • Brinjal / Eggplant- Bengan - Kaththarikkai - கத்தரிக்காய்
  • Cabbage - Bandh gobi - Muttai khos - முட்டைக்கோஸ்
  • Cardamom - Elaichi - Elakkai - ஏலக்காய்
  • Carrot - Gajar - காரட்
  • Cashewnut - Khaju - Mundiri - முந்திரி
  • Cauliflower - Phool gobi - காலிபிளவர்
  • Chickpea /Bengal gram -Channa dal-Konndai kadalai -கொண்டைக்கடலை
  • Chili / Chilly- Mirchi - Milakai - மிளகாய்
  • Cinnamon - Dal chini - Pattai - பட்டை
  • Clove - Lavang - Kirambu - கிராம்பு
  • Coconut - Narial - Thengai - தேங்காய்
  • Coriander - Dhania – Kottha malli - கொத்தமல்லி - மல்லி
  • Cucumber - Kheera / Kaakkadi - Vellari - வெள்ளரி
  • Cumin - Jeera- Jeeragam - சீரகம்
  • Curry leaves - Kari pattha - Kari veppilai - கறிவேப்பிலை
  • Drumstick - sajna - Murungaikai - முருங்கைக்காய்
  • French bean – Sem phalli - Avaraikkai - அவரைக்காய்
  • Fennel - Sonf- Sombu / perunjeeragam - சோம்பு / பெருஞ்சீரகம்
  • Fenugreek - Methi - Vendhayam - வெந்தயம்
  • Garlic - Lasoon - Poondu - பூண்டு / வெள்ளைப்பூண்டு
  • Ginger - Adarak - Inji - இஞ்சி
  • Groundnut / Peanut - Moongphalli – Verkadalai - வேர்கடலை / நிலக்கடலை
  • Lady’s finger -Bindi - Vendaikkai - வெண்டைக்காய்
  • Lettuce / Amaranthus / Spinach - Palak - Keerai - கீரை
  • Maize - Makkai - Cholam - சோளம்
  • Millet - Bajra - Kambu - கம்பு
  • Mint- Podhina - pudhina - புதினா
  • Green gram - Moong - Pasippayaru - பாசிப்பயறு
  • Millet - Ragi – Kelvaragu - கேழ்வரகு / கேப்பை
  • Mustard- Sarson - Rai- Kadugu - கடுகு
  • Nutmeg - Jaiphal - Jadhikkai - ஜாதிக்காய்
  • Onion - Pyaj - Vengayam - வெங்காயம்
  • Parboiled rice - Pulungal arisi - புழுங்கலரிசி
  • Pea-– Mattar - Pattani - பட்டாணி
  • Pigeon pea - Arhar dal/Tuar dal - Thuvaramparuppu - துவரம்பருப்பு
  • Potato - Aloo -Urulaikkilangu - உருளைக்கிழங்கு
  • Pumpkin - Kaththoo - Poosani - பூசணி
  • Radish - Mulli- Mullangi - முள்ளங்கி
  • Raw rice / Kolam rice- Kacha chaval - Pacharisi - பச்சரிசி
  • Rice - Chaval - Arisi - அரிசி
  • Saffron - Kungumappoo - குங்குமப்பூ
  • Semolina – Suji – Rava / Ravai - ரவை / இரவை
  • Sesame - Til - Ellu - எள்ளு
  • Tamarind - Imli – Puli -புளி
  • Turmeric - Haldi - Manjal - மஞ்சள்
  • Urad dal - Ulundham paruppu - உளுந்தம்பருப்பு
  • Wheat - Gheung- கோதுமை

பருப்பு இல்லாத சாம்பார் Sambar without lentil (thuvaram paruppu / Dal / Dhal / Daal)

Sambar / sambhar without dal, served with idli / idly or dosai / dosa .

பருப்பு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது! கவலை வேண்டாம். இதோ பாருங்கள். பருப்பு இல்லாத சாம்பார்! இதை இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு எளிமையாகப் பயன்படுத்தலாம்.



தேவையான பொருட்கள்:



  • சிவப்பு பூசணிக்காய் (பறங்கிக்காய்) : 1கீற்று
  • தக்காளி-1
  • பச்சைமிளகாய்-4
  • சின்னவெங்காயம்-10
  • புளி-ஒரு நெல்லிக்காய் அளவு
  • வெல்லம்-சிறிய துண்டு
  • சாம்பார் பொடி-2தேக்கரண்டி
  • உப்பு-தேவையான அளவு
  • கறிவேப்பிலை-1கொத்து
  • மல்லித்தழை-சிறிதளவு
தாளிக்க:




  • எண்ணெய்-2தேக்கரண்டி






  • கடுகு-1தேக்கரண்டி






  • சீரகம்-1தேக்கரண்டி






  • வெந்தயம்-1/2தேக்கரண்டி






  • வறமிளகாய் - 2






  • கறிவேப்பிலை-1கொத்து





  • செய்முறை:


    • பூசணிக்காய், பச்சைமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் குக்கரில் வேக விடவும்.
    • வெந்ததும் கரண்டியால் கடையவும்.
    • சாம்பார் பொடி, புளிக்கரைசல், வெல்லம் மூன்றையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
    • உப்பு புளி காரம் சரியா என்று பார்க்கவும்.
    • நன்கு கொதித்தபின் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
      கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும் .

    Tuesday, February 19, 2008

    சமையல் அறையை ஒழுங்கு படுத்துதல் Arranging the kitchen

    • Arrange all the items used for cooking, so as to be easily accessible.

    • Label the containers for quick reference.

    • சமைப்பதற்கு முன், சமைப்பதற்குத் தேவையான எல்லா சாமான்களையும் அளவோடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    • பொருள்கள் இருக்கும் டப்பா, ஜாடி போன்றவற்றின் மேல் பொருளின் பெயரை எழுதி வைத்தால் அவசரத்திற்கு எடுக்க சுலபமாக இருக்கும்.

    INTRODUCTION

    • Cooking is an art. It forms part of everyday life of human being. Majority of the food we eat is cooked one. Various cooking methods are being followed for different varieties of food items. I will make use of this blog to offer you simplified and easy tips.