google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: தமிழ் சமையல் குறிப்புகள்

Tuesday, July 28, 2009

தமிழ் சமையல் குறிப்புகள்

·        வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவவும் அல்லது முன்பே சிறிது நல்லெண்ணையை கையில் தடவிக் கொள்ளவும்.

·        தேங்காயை உடைப்பதற்கு முன் தண்ணீரில் நனைத்தால் சரியாக உடையும்.

·        காலிபிளவர் சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு போட்டு அதில் சிறிது நேரம் மூழ்க வைத்தால் ஏதேனும் புழு இருந்தால் நீங்கி விடும்.

·        குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

·        அடை, வடை, தோசை போன்றவை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

·        சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு வேண்டிய புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

·        குலோப்ஜாமூன் செய்யும்போது கடினமாகி விட்டால், ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

No comments: