பருப்பு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது! கவலை வேண்டாம். இதோ பாருங்கள். பருப்பு இல்லாத சாம்பார்! இதை இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு எளிமையாகப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
- சிவப்பு பூசணிக்காய் (பறங்கிக்காய்) : 1கீற்று
- தக்காளி-1
- பச்சைமிளகாய்-4
- சின்னவெங்காயம்-10
- புளி-ஒரு நெல்லிக்காய் அளவு
- வெல்லம்-சிறிய துண்டு
- சாம்பார் பொடி-2தேக்கரண்டி
- உப்பு-தேவையான அளவு
- கறிவேப்பிலை-1கொத்து
- மல்லித்தழை-சிறிதளவு
செய்முறை:
- பூசணிக்காய், பச்சைமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் குக்கரில் வேக விடவும்.
- வெந்ததும் கரண்டியால் கடையவும்.
- சாம்பார் பொடி, புளிக்கரைசல், வெல்லம் மூன்றையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- உப்பு புளி காரம் சரியா என்று பார்க்கவும்.
- நன்கு கொதித்தபின் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும் .
No comments:
Post a Comment