Consumption of warm paruthi paal helps to get rid off common cold.
பருத்திப் பாலானது, மிகவும் சுவையானது. அது மட்டுமல்ல, சத்து நிறைந்தது.
தேவையானவை:
- பருத்திக் கொட்டை - நூறு கிராம்
- பச்சரிசி - ஒரு கைப்பிடியளவு
- வெல்லம் -கால் கிலோ அல்லது சற்று மிகையாக
- சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் -இரண்டு டீஸ்பூன்
செய்முறை:
- பருத்திக் கொட்டையை சுத்தப்படுத்தி ஊறவைத்து நன்றாக அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும்.
- பச்சரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து கொள்ளவும்.
- பச்சரிசி மாவையும் பருத்திப் பாலையும் கலந்து அடுப்பில் ஏற்றவும்.
- தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- கலவை கெட்டியாகப் பொங்கி வரும்.
- இப்போது வெல்லம் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- வெல்லம் கரைந்தவுடன் சுக்குப்பொடியையும் , தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.
- மேலும் சிறிது கிளறிவிட்டு, சற்று நேரம் சென்றதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சூடாகப் பரிமாறவும்.
1 comment:
good information
Post a Comment