google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips

Sunday, October 17, 2010

Nellikkaai thayir pachadi


Gooseberry curd pachadi
Gooseberry yogurt pachchadi
Nellikkaai thayir pachadi


நெல்லிக்காய் தயிர் பச்சடி 

தேவையானவை:

  • நெல்லிக்காய் / நெல்லிக்கனி: ஆறு 

  • தயிர்: ஒரு கப்

  • தேங்காய்த்துருவல்: கால் கப்

  • பச்சை மிளகாய்: இரண்டு 

  • இஞ்சித்துண்டு: ஒன்று 

  • உப்பு: வேண்டிய அளவு



தாளிக்க: 

  • கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 


செய்முறை:

  • நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி சிறு துண்டுகளாக்கி, அவற்றுடன் துருவப்பட்ட தேங்காயையும், ஒடிக்கப்பட்ட பச்சை மிளகாய்களையும், தோல் நீக்கப்பட்டதும் நசுக்கப்பட்டதுமான இஞ்சியையும் கலந்து நன்றாக அரைத்து, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கிளறவும். இது, தாளிக்காத பச்சடி ஆகும்.  

  • இருப்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ச்சி, கடுகு வெடிக்கச் செய்து, பெருங்காயம் சேர்த்து, தாளிக்காத பச்சடியையும் ஒன்றாகக் கலந்து, கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விட்டால், அடடா வைட்டமின் சி நிறைந்த பச்சடி உங்கள் முன்னே!    



Thursday, August 12, 2010

ரம்ஜான் (ரமலான்) நோன்புக் கஞ்சி

Ramadaan Nonbu Kanji / Ramadan Nombu Ganji / Ramzan Nonbu Cangee / Nombu Conjee / Nonbu Kunji / Nonbu Porridge / Nonbu Gruel


தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி: 500 கிராம்
  • வெள்ளைப் பூண்டு: 1 
  • கடலைப்பருப்பு: 50 கிராம்
  • வெந்தயம்: 2 தேக்கரண்டி
  • இஞ்சி: இருவிரல் பருமன் 
  • சீரகப்பொடி: 2-3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி: 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்பொடி: அரை டீ ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்:  2
  • கேரட்: பாதி
  • தக்காளி: 2 
  • சமையல் எண்ணெய்:  50 மில்லி லிட்டர் 
  • பச்சை மிளகாய்: 2-3 
  • புதினா: ஒரு கொத்து
  • மல்லித் தழை:  ஒரு கொத்து
  • எலுமிச்சை ஜூஸ்: 1 டி ஸ்பூன் 
  • தேங்காய்ப் பால்: 300 மில்லி லிட்டர் 
  • கொத்துக்கறி: 100 கிராம் 
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:



  • பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நீரில் அலசி வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.



  • கொத்துக்கறியை நீரில் கழுவி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். 




  • தக்காளியையும்  வெங்காயத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 



  • புதினாவையும் , கொத்தமல்லியையும்  காம்பு நீக்கவும். 


  • பச்சை மிளகாய்களின் காம்புகளையும்  நீக்கி விடவும்.



  • கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.



  • எஞ்சிய இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.




  • சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.



  • நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியைச்  சேர்த்து மேலும் வதக்கவும்.



  • கொத்துக்கறியையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். 



  • நறுக்கப்பட்ட  கேரட் துண்டுகளையும் முழு பச்சைமிளகாய்களையும் சேர்த்து வதக்கவும்.



  • வதங்கும்போது சீரகப் பொடியையும்  மஞ்சள் பொடியையும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.



  • மல்லித் தழையைத் தூவி, சட்டியைச்சில  நிமிடங்கள் மூடி வைக்கவும்.



  • நெருப்பைக் குறைக்கவும்.


  • மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.



  • கொதித்ததும் அரிசியை மெதுவாகச்சேர்த்து சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் கொதிக்க விடவும்.




  • அப்படிக் கொதிக்கும்போது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும்.


  • தேவையான அளவு உப்பிட்டு, அடிக்கடி  கிளறவும். 




  • தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து, கரைந்த அரிசியுடன் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.




  • நிறைவாக புதினா இலையைத் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.






இதுவே சுவையான நோன்புக் கஞ்சி செய்யும் முறையாகும்.





Wednesday, June 30, 2010

சத்துமாவு

  • கம்பு, கேழ்வரகு எனப்படும் கேப்பையாகிய ராகி, கோதுமை, பச்சரிசி, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, நிலக்கடலை என்றும் மணிலா என்றும் மல்லாட்டை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை, முந்திரி, பாதாம், ஏலக்காய், ஜவ்வரிசி, மக்காச் சோளம் இவை எல்லாவற்றையும் நூறு கிராம் வீதம் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியிலோ அல்லது மாவரைக்கும் மெஷினிலோ அரைத்துக்கொள்ளவும்.
  • ஆறிய பின் சலித்து கொள்ளவும்.
  • தேவைப்படும் போதெல்லாம் பாலில் காய்ச்சி அருந்தலாம்.

ஆடிக்கூழ்

தேவையான பொருட்கள்:
  • உளுத்தம் பருப்பு – 200 கிராம்
  • பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 150 கிராம்
  • நெய் – 150 கிராம்
  • தண்ணீர் – 400 மி.லி.
செய்முறை:
  • உளுத்தம் பருப்பை வாணலியில் சிவக்க வறுக்கவும்.
  • அத்துடன் அரிசியையும் சேர்த்து வறுக்கவும்.
  • ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, மாவைப் போட்டுக் குறைந்த தீயில் வறுத்து, கரைத்து வைக்கப்பட்டுள்ள வெல்லப் பாகை ஊற்றிக் கிளறவும்.
மிகவும் சுவையான ஆடிக்கூழ் இதுவேயாகும்.

Wednesday, June 23, 2010

Pumpkin Sambar பூசணிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:


  • பூசணித்துண்டுகள்: 10
  • தக்காளி: 4
  • வேக வைத்த துவரம்பருப்பு: 4 கரண்டி
  • சாம்பார்பொடி: 2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி: 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம்: சிறிதளவு
  • புளி: எலுமிச்சை அளவு
  • எண்ணெய்: 1 டீஸ்பூன்
  • தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை
  • அலங்கரிக்க: கொத்தமல்லித்தழை
செய்முறை:


  • புளியை சுடுநீரில் கரைக்கவும்.
  • குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
  • அடுப்பை ஏற்றி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அத்துடன் பூசணித்துண்டுகள், தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
  • பாதி வெந்ததும் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
  • மீண்டும் புளியுடன் ஒரு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்துச் சேர்க்கவும்.
  • கொத்தமல்லியைக் கழுவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, June 8, 2010

உளுந்து களி

உளுந்து களி
தேவையான பொருட்கள்:
உளுந்து: 2 உழக்கு
வெல்லம் அல்லது கருப்பட்டி: ருசிக்கேற்ற அளவு
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
சுருக்கமான செய்முறை:

  • உளுந்தை நன்றாக வறுத்து மாவாக அரைத்து, சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை அல்லது கருப்பட்டியை பொடித்துப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வாசம் வருமளவு பாகாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி அந்த மாவில் கட்டியில்லாது கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  • இடையிடையில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கிளறி பளபளப்பாக வரும் போது தண்ணீரில் கைகளை நனைத்து தொட்டுப் பார்த்தால் ஒட்டாத போது இறக்கவும்.
  • சூடாக தேவைப்பட்டால் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிடவும்.
  • சுவை, சத்து அதிகம். முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

Wednesday, June 2, 2010

கத்திரிக்காய் அவியல்

தேவையான பொருட்கள் :


  • கத்திரிக்காய்- 1/4 kg
  • சின்ன வெங்காயம்- 4
  • கறிவேப்பிலை- 2 கொத்து
  • கடுகு- 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய்-2 டீஸ்பூன்
  • உப்பு- 1 டீஸ்பூன்


அரைக்க :


  • தேங்காய் - அரைமுடி
  • சீரகம்-1/4 டீஸ்பூன்
  • மஞ்சத்தூள்- 1/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • சின்ன வெங்காயம்-2


செய்முறை :


  • அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு முக்கால் பதமாக அரைத்து வைக்கவும்.

  • கத்திரிக்காயை நான்காக நறூக்கி வைக்கவும்.

  • சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.

  • வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகைப் போட்டு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கத்திரிக்காயை போட்டு கிளறி அவை முழ்கும் வரைக்கும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். உப்பை சேர்க்கவும்.
  • காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி உப்பை பதம் பார்த்து தேவையானால் சிறிது சேர்க்கவும்.

  • கறிவேப்பிலையை மேலாக போட்டு இறக்கி விடவும்.
  • சுவையான கத்திரிக்காய் அவியல் தயார்.