google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips

Tuesday, September 22, 2009

Deepavali laddu / தீபாவளி லட்டு

இது எல்லோருக்கும் பிடித்த அருமையான சுவையான ஸ்வீட் ஆகும்.

தேவையான பொருட்கள்:


  • கடலை மாவு: இரண்டு கப்
  • சீனி: ஒன்றரை கப்
  • முந்திரிப் பருப்பு: பத்து
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை: பத்து
  • ஏலக்காய்ப் பொடி: கால் தேக்கரண்டி
  • சமையல் சோடா: ஒரு சிட்டிகை
  • நெய்: இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்: அரை லிட்டர்
  • கலர் (மஞ்சள்): ஒரு சிட்டிகை (விரும்பினால் மட்டும்)
  • உப்பு: ஒரு சிட்டிகை

செய்முறை:

  • கடலை மாவுடன் உப்பையும் சமையல் சோடாவையும் முக்கால் கப் தண்ணீரையும் சேர்த்து, தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, அரிகரண்டி உதவியுடன் மாவை ஊற்றி பூந்தி செய்து கொள்ளவும்.
  • மற்றொரு சட்டியில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் சீனியையும் ஏலக்காய்ப் பொடியையும், தேவைப்பட்டால் கலரையும் போட்டு சீனி நன்கு கரையும் வரை கிண்டவும்.
  • பின்பு அதில் பூந்தியைப் போட்டுக் கிளரவும்.
  • அதன் மேல் நெய்யில் வறுபட்ட கிஸ்மிஸ்ஸையும் முந்திரியையும் போட்டு, சூடு ஆறியதும் மிக்சியில் லேசாக ஒரு நொடி அரைத்து, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு வேண்டிய சைசில் உருண்டை பிடிக்கவும்.

Monday, September 21, 2009

Deepavali medicine / Diwali lekiyam

தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து


தீபாவளியன்று நாம் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகளைச் சாப்பிடுவோம். நம் வீட்டு பதார்த்தங்கள் மட்டும் அல்லாது சுற்றியுள்ள வீட்டுப் பதார்த்தங்களையும் சாப்பிட நேரும். இதற்காகவே அக்காலத்தில் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து என்பதை ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்கள். இது அஜீரணத்தைப் போக்கி நல்ல செரிமானம் கொடுக்கும். அதிகாலையிலேயே ஒரு நெல்லிக்காய் அளவு இதைச் சாப்பிடக் கொடுப்பார்கள்.

தீபாவளி லேகியத்தைப் பலவிதங்களில் செய்வார்கள்.

மிகவும் சுருக்கமான முறை:

சுக்கை நன்கு பொடியாக்கி, சலித்து, அதில் வெல்லப் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் கலந்து உருட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது சாப்பிடலாம்.



மற்ற முறைகள்:

தேவையான பொருட்கள்:
இஞ்சி: ஒரு துண்டு
மல்லி (தனியா): ஒரு கப்
சீரகம்: அரை கப்
நெய்: மூன்று தேக்கரண்டி
வெல்லம்: ஒரு கப்

செய்முறை:

மல்லி, சீரகம்,இஞ்சி இம்மூன்றையும் தண்ணீர் விட்டு மிக நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை சேர்த்துக் கொதிக்க விட்டு, நெய்யைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்கவும். நன்கு இறுகியவுடன் இறக்கி, பத்திரப்படுத்திக் கொள்ளவும். (சிறிது ஏலக்காய் பொடியை, கடைசியாகத் தூவியும் இறக்கலாம். சூடு ஆறிய பின்பு தேன் கலந்தும் சாப்பிடலாம்.) சித்தரத்தை, ஜாதிக்காய், அதிமதுரம், மிளகு, ஓமம், சுக்கு, கண்டந்திப்பிலி போன்றவற்றையும் அரைக்கும்போது சேர்த்தால் நல்ல பயன் உண்டு.

Friday, August 21, 2009

Cooking Tips

Planning preserving and preparing:

  • Have a weekly planned menu, so as to ensure the consumption of required food with nutritional value.
  • Prepare a grocery list accordingly.
  • Seasonal fruits and vegetables are cheaper and fresh.
  • To make dosai / dosa attractively brown and crisp, add a little sugar to the dosa mixture.
  • To preserve the biscuits crisp, keep a blotting paper in the container and keep it tightly closed.
  • Place an apple with the potatoes to prevent them from budding.
  • Before serving ice cream, keep the serving bowls in the fridge to prevent undesirable quick melting.
  • Add a small piece of beetroot while making tomato puree, to obtain bright red color.
  • Crush ice cubes before putting in the mixer- grinder to avoid damage of the blades.

Sunday, August 16, 2009

Thoothuvalai Rasam தூதுவளை ரசம்

தூதுவளை ரசம், இருமலுக்கு மருந்து ஆகும். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்:


  • தூதுவளை இலை: ஒரு கைப்பிடி
  • மிளகு: ஒரு தேக்கரண்டி
  • சீரகம் : ஒரு தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்: இரண்டு தேக்கரண்டி
  • பூண்டு: ஆறு பல்
  • பெருங்காயம்: கால் தேக்கரண்டி
  • புளி: ஒரு நெல்லிக்காய் அளவு
  • கடுகு: தேவையான அளவு
  • கறிவேப்பிலை: ஒரு கொத்து
  • புதினா: ஒரு கொத்து
  • உப்பு: தேவையான அளவு
  • வரமிளகாய்: நான்கு
  • கொத்த மல்லி: ஒரு கைப்பிடி
செய்முறை:

  • இருப்புச்சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்.
  • அதில் தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • இன்னொரு வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, வற மிளகாய் போட்டு வதக்கவும்.
  • கரைத்தவற்றை அதில் ஊற்றி, கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு, கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

Saturday, August 15, 2009

Black gram Kazhi உளுந்து கழி

It is also called Urad dal kazhi. Very delicious, easy to prepare, easy to digest sweet dish, capable of curing or reducing lower back pain.


உளுந்தங் கழி / உளுந்து மாவு கழி / உளுத்தங் கழி

தேவையான பொருட்கள்:

  • உளுந்து மாவு: ஒரு ஆழாக்கு
  • அரிசி மாவு: அதில் கால் பங்கு
  • பொடி செய்யப்பட்ட கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் ஒரு ஆழாக்கு
  • நல்லெண்ணெய்: நூறு கிராம்


செய்முறை:

  • ஒரு கப் தண்ணீரில் கருப்பட்டியைப் போட்டு, கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
  • மாவுகளை தூவிக்கொண்டே கட்டிபடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  • அடுப்பைக் குறைத்து, கிளறிக் கொண்டே நல்லெண்ணெய் விட்டு முடிந்தவரை சட்டியில் ஒட்டாமல் கிண்டவும்.
  • இறக்கி ஆறியபின் கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • நல்லெண்ணையுடன் சேர்த்து பிசைந்து சூடாகச் சாப்பிடவும்.
இடுப்பு வலியை நன்றாகக் கேட்கும்.

Temple Tamarind Rice கோயில் புளியோதரை

It is an easy to prepare sour to taste rice variety. Can be carried as packed food, during the journey.

கோயில் புளியோதரை

தேவையான பொருட்கள்:

  • வெந்த சோறு: ஒரு கப்
  • புளி: எலுமிச்சை அளவு
  • கடுகு, எள், வெந்தயம்: முறையே ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் கீற்று: ஒன்று
  • வரமிளகாய்: ஐந்து
  • வெல்லம்: சிறு துண்டு
  • கடலைப் பருப்பு, மஞ்சள், முந்திரி, நிலக்கடலை (வேர் கடலை), நல்லெண்ணெய்: சிறிதளவு
செய்முறை:


  • ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணையைக் காயவிட்டு, கடுகை வெடிக்கச்செய்து, கடலைப் பருப்பு, எள், மிளகாய், மஞ்சள், பெருங்காயம் போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி, உப்பைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
  • வெந்தயத்தை வெறுமனே வறுத்து, பொடியாக்கி, அதில் முந்திரி, தோல் நீக்கப்பட்ட வேர் கடலை, தேங்காய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து, கொதித்துக் கொண்டு இருப்பதில் சேர்த்துக் கலந்து விடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  • உப்பு, புளி, உறைப்பு நன்றாகச் சார்ந்த பின்பு நல்ல ருசியாக இருக்கும்.

Tomato rasam தக்காளி ரசம்

Tomato Rasam is an easy to prepare soup like tasty liquid food, taken with rice.



தேவையான பொருட்கள்:


  • துவரம் பருப்பு: நூறு கிராம்
  • தக்காளிப் பழம்: நூறு கிராம்
  • புளி: ஒரு நெல்லிக்காய் அளவு
  • மிளகு: ஒரு தேக்கரண்டி
  • வரமிளகாய்: ஐந்து
  • சீரகம்: ஒரு தேக்கரண்டி
  • மல்லி: ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம்: ஒரு சிறிய துண்டு
  • வெந்தயம்: அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை: சிறிதளவு
  • கொத்தமல்லி: சிறிதளவு
  • மஞ்சள் தூள்: சிறிதளவு
  • நல்லெண்ணெய்: சிறிதளவு

செய்முறை:


  • கால் படி தண்ணீரில் பருப்பை வேகவிடவும்.
  • வெந்தபின்பு மஞ்சள் தூள், நல்லண்ணெய் சேர்க்கவும்.
  • பருப்பு கரைந்ததும் புளியைக் கரைத்து விடவும்.
  • பின்பு மிளகாய், மிளகு, மல்லி, சீரகம், ஆகியவற்றைப் போடி செய்து போடவும்.
  • தக்காளிப் பழத்தையும் நறுக்கிப் போடவும்.
  • கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு, ஒரு கொத்தி கொதித்ததும் இறக்கி விடவும்.