கோயில் புளியோதரை
தேவையான பொருட்கள்:
- வெந்த சோறு: ஒரு கப்
- புளி: எலுமிச்சை அளவு
- கடுகு, எள், வெந்தயம்: முறையே ஒரு தேக்கரண்டி
- தேங்காய் கீற்று: ஒன்று
- வரமிளகாய்: ஐந்து
- வெல்லம்: சிறு துண்டு
- கடலைப் பருப்பு, மஞ்சள், முந்திரி, நிலக்கடலை (வேர் கடலை), நல்லெண்ணெய்: சிறிதளவு
- ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணையைக் காயவிட்டு, கடுகை வெடிக்கச்செய்து, கடலைப் பருப்பு, எள், மிளகாய், மஞ்சள், பெருங்காயம் போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி, உப்பைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
- வெந்தயத்தை வெறுமனே வறுத்து, பொடியாக்கி, அதில் முந்திரி, தோல் நீக்கப்பட்ட வேர் கடலை, தேங்காய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து, கொதித்துக் கொண்டு இருப்பதில் சேர்த்துக் கலந்து விடவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
- உப்பு, புளி, உறைப்பு நன்றாகச் சார்ந்த பின்பு நல்ல ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment