உளுந்தங் கழி / உளுந்து மாவு கழி / உளுத்தங் கழி
தேவையான பொருட்கள்:
- உளுந்து மாவு: ஒரு ஆழாக்கு
- அரிசி மாவு: அதில் கால் பங்கு
- பொடி செய்யப்பட்ட கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் ஒரு ஆழாக்கு
- நல்லெண்ணெய்: நூறு கிராம்
செய்முறை:
- ஒரு கப் தண்ணீரில் கருப்பட்டியைப் போட்டு, கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
- மாவுகளை தூவிக்கொண்டே கட்டிபடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
- அடுப்பைக் குறைத்து, கிளறிக் கொண்டே நல்லெண்ணெய் விட்டு முடிந்தவரை சட்டியில் ஒட்டாமல் கிண்டவும்.
- இறக்கி ஆறியபின் கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- நல்லெண்ணையுடன் சேர்த்து பிசைந்து சூடாகச் சாப்பிடவும்.
No comments:
Post a Comment