தேவையான பொருட்கள்:
- தூதுவளை இலை: ஒரு கைப்பிடி
- மிளகு: ஒரு தேக்கரண்டி
- சீரகம் : ஒரு தேக்கரண்டி
- நல்லெண்ணெய்: இரண்டு தேக்கரண்டி
- பூண்டு: ஆறு பல்
- பெருங்காயம்: கால் தேக்கரண்டி
- புளி: ஒரு நெல்லிக்காய் அளவு
- கடுகு: தேவையான அளவு
- கறிவேப்பிலை: ஒரு கொத்து
- புதினா: ஒரு கொத்து
- உப்பு: தேவையான அளவு
- வரமிளகாய்: நான்கு
- கொத்த மல்லி: ஒரு கைப்பிடி
- இருப்புச்சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்.
- அதில் தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- இன்னொரு வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, வற மிளகாய் போட்டு வதக்கவும்.
- கரைத்தவற்றை அதில் ஊற்றி, கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு, கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .
No comments:
Post a Comment