தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு விதமான சாதாரண அதேநேரம் சுவையான தக்காளி சூப் தயாரிப்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மிகவும் நன்றாகப் பழுத்த தக்காளி - 1 0
- இஞ்சி -அரை விரல் நீளம்
- வெள்ளைப் பூண்டு - 4 பல்
- வறமிளகாய் - 4 அல்லது 5
- கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
- மல்லி (தனியா) - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரைக்கால் தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- எண்ணெய் - தாளிக்க
- உப்பு -தேவையான அளவு
செய்முறை:
- தக்காளியைக் கழுவி நறுக்கி வைக்கவும்.
- வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டையும் தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.
- மல்லியை சும்மா வறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தக்காளி, வெள்ளைப்பூண்டு, மல்லி, இஞ்சி, மஞ்சள் தூள், பாதி அளவு கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்க விடவும்.
- தக்காளி நன்றாக வெந்தபின் இறக்கவும்.
- ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- பிறகு அதை வடிகட்டி உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
- சுமார் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
தாளித்தல்:
- இருப்புச் சட்டி என்ற வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளிக்கவும்.
- இதனுடன் மீதியுள்ள கறிவேப்பிலை, மிளகாய் இரண்டையும் சேர்த்து வறுக்கவும்.
- இதை, சூப்பில் சேர்க்கவும்.
சூடாக அருந்த சுவையாக இருக்கும்.