google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: Tomato soup in Tamil / தக்காளி சூப்

Friday, July 31, 2009

Tomato soup in Tamil / தக்காளி சூப்

A typical Tamil Nadu style simple tomato soup recipe is given below.

தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு விதமான சாதாரண அதேநேரம் சுவையான தக்காளி சூப் தயாரிப்பதைப் பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:

  • மிகவும் நன்றாகப் பழுத்த தக்காளி - 1 0
  • இஞ்சி -அரை விரல் நீளம்
  • வெள்ளைப் பூண்டு - 4 பல்
  • வறமிளகாய் - 4 அல்லது 5
  • கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
  • மல்லி (தனியா) - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரைக்கால் தேக்கரண்டி
  • சீரகம் - கால் தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - தாளிக்க
  • உப்பு -தேவையான அளவு


செய்முறை:

  • தக்காளியைக் கழுவி நறுக்கி வைக்கவும்.
  • வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டையும் தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.
  • மல்லியை சும்மா வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தக்காளி, வெள்ளைப்பூண்டு, மல்லி, இஞ்சி, மஞ்சள் தூள், பாதி அளவு கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்க விடவும்.
  • தக்காளி நன்றாக வெந்தபின் இறக்கவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • பிறகு அதை வடிகட்டி உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  • சுமார் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

தாளித்தல்:
  • இருப்புச் சட்டி என்ற வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளிக்கவும்.
  • இதனுடன் மீதியுள்ள கறிவேப்பிலை, மிளகாய் இரண்டையும் சேர்த்து வறுக்கவும்.
  • இதை, சூப்பில் சேர்க்கவும்.

சூடாக அருந்த சுவையாக இருக்கும்.

1 comment:

Unknown said...

United Pressure Cookers, India's Top Leading and Selling Pressure Cooker Brand has launched its online shopping portal to offer people to buy its complete range of pressure cookers. Buy your dream 3 Litre Pressure Cooker online