Ingredients:
- Tomato: 1 Kg
- Garlic: 150 gm
- Turmeric powder: As required
- Chili powder: As required
- Fenugreek powder (Methi): 1 tbsp
- Asafetida (Hing): a little
- Gingelly oil (sesame oil / edible oil / til ka tel): for sauté
- Mustard (Sarson / Rai): for sauté
- Salt: As required
Method of preparation:
- Wash tomatoes and dry them.
- Remove skin from garlic.
- Grind them together in a mixer.
- Add salt and mix.
- Pour this on a wide plate and keep under hot direct sunlight so as to get it dry like jam.
- Heat and stir this in a sauce pan (Kadhai).
- After some time add turmeric powder, chili powder, fenugreek powder (methi powder) and asafetida (hing).
- Stir and turn the stove off.
- Use another sauce pan for sauté and mix well.
- நன்றாகப் பழுத்த தக்காளி:ஒரு கிலோ
- பூண்டு: நூற்றைம்பது கிராம்
- மஞ்சள் தூள்: தேவையான அளவு
- மிளகாய் தூள்: தேவையான அளவு
- வெந்தயத் தூள்: ஒரு மேஜைக் கரண்டி
- பெருங்காயத்தூள்: சிறிதளவு
- உப்பு: தேவையான அளவு
- தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு
செய்முறை:
- தக்காளிப் பழங்களுடன் தோல் உரிக்கப்பட்ட பூண்டுகளை அரைக்கவும்.
- உப்புப் போட்டுக் கலக்கி, அகலமான தட்டில் ஊற்றி, நன்கு வற்றும் வரை கொளுத்தும் வெயிலில் காய வைக்கவும்.
- அடுப்பு பற்றவைத்து இருப்புச் சட்டியை சூடேற்றி, காயவைக்கப்பட்டதை இட்டு நன்றாகக் கிண்டவும்.
- தொக்கு போல வரும். அப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்துக் கலக்கி, அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- இதில், இன்னொரு இருப்புச்சட்டியில் தாளித்ததை விட்டு, கலந்து வைக்கவும்.
இதுவே சுவையான தக்காளி ஊறுகாய். புரோட்டா, பூரி, தோசை, இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம், ஆமை வடை, உளுந்த வடை, இப்படி எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.
No comments:
Post a Comment