காளான் புரட்டல் (காளான் மசாலா)
தேவையான பொருள்கள்:
- காளான்: 500 கிராம்
- வெங்காயம்: ஒன்று
- தக்காளி: ஒன்று
- இஞ்சி பூண்டு விழுது: பாதி தேக்கரண்டி
- மிளகாய்த்தூள்: ஒரு தேக்கரண்டி
- சீரகம்: ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்: தேவையான அளவு
- எலுமிச்சை சாறு: ஒரு தேக்கரண்டி
- உப்பு: தேவையான அளவு
செய்முறை:
- இளஞ் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, காளானைப் பதினைந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுக்கவும்.
- கழுவவும்.
- துண்டுகளாக நறுக்கவும்.
- அதே போல வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கவும்.
- இருப்புச் சட்டியில் (ஹிந்தியில் சொல்வதென்றால் கடாயில்) எண்ணையைச் சூடாக்கி, சீரகத்தைப் போட்டுத் தாளிக்கவும்.
- வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கவும்.
- அத்துடன் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
- அதனுடன் தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
- மொத்தமாக எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்.
- பிறகு மிளகாய்த்தூளை போட்டு லேசாக வதக்கி, காளானையும் உப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் மூடி வைத்து வேகவிடவும்.
- காளானிலிருந்து நீர் வெளியேறும்.
- நீர் சுண்டும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
No comments:
Post a Comment