google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: August 2009

Friday, August 21, 2009

Cooking Tips

Planning preserving and preparing:

  • Have a weekly planned menu, so as to ensure the consumption of required food with nutritional value.
  • Prepare a grocery list accordingly.
  • Seasonal fruits and vegetables are cheaper and fresh.
  • To make dosai / dosa attractively brown and crisp, add a little sugar to the dosa mixture.
  • To preserve the biscuits crisp, keep a blotting paper in the container and keep it tightly closed.
  • Place an apple with the potatoes to prevent them from budding.
  • Before serving ice cream, keep the serving bowls in the fridge to prevent undesirable quick melting.
  • Add a small piece of beetroot while making tomato puree, to obtain bright red color.
  • Crush ice cubes before putting in the mixer- grinder to avoid damage of the blades.

Sunday, August 16, 2009

Thoothuvalai Rasam தூதுவளை ரசம்

தூதுவளை ரசம், இருமலுக்கு மருந்து ஆகும். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்:


  • தூதுவளை இலை: ஒரு கைப்பிடி
  • மிளகு: ஒரு தேக்கரண்டி
  • சீரகம் : ஒரு தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்: இரண்டு தேக்கரண்டி
  • பூண்டு: ஆறு பல்
  • பெருங்காயம்: கால் தேக்கரண்டி
  • புளி: ஒரு நெல்லிக்காய் அளவு
  • கடுகு: தேவையான அளவு
  • கறிவேப்பிலை: ஒரு கொத்து
  • புதினா: ஒரு கொத்து
  • உப்பு: தேவையான அளவு
  • வரமிளகாய்: நான்கு
  • கொத்த மல்லி: ஒரு கைப்பிடி
செய்முறை:

  • இருப்புச்சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்.
  • அதில் தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • இன்னொரு வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, வற மிளகாய் போட்டு வதக்கவும்.
  • கரைத்தவற்றை அதில் ஊற்றி, கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு, கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

Saturday, August 15, 2009

Black gram Kazhi உளுந்து கழி

It is also called Urad dal kazhi. Very delicious, easy to prepare, easy to digest sweet dish, capable of curing or reducing lower back pain.


உளுந்தங் கழி / உளுந்து மாவு கழி / உளுத்தங் கழி

தேவையான பொருட்கள்:

  • உளுந்து மாவு: ஒரு ஆழாக்கு
  • அரிசி மாவு: அதில் கால் பங்கு
  • பொடி செய்யப்பட்ட கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் ஒரு ஆழாக்கு
  • நல்லெண்ணெய்: நூறு கிராம்


செய்முறை:

  • ஒரு கப் தண்ணீரில் கருப்பட்டியைப் போட்டு, கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
  • மாவுகளை தூவிக்கொண்டே கட்டிபடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  • அடுப்பைக் குறைத்து, கிளறிக் கொண்டே நல்லெண்ணெய் விட்டு முடிந்தவரை சட்டியில் ஒட்டாமல் கிண்டவும்.
  • இறக்கி ஆறியபின் கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • நல்லெண்ணையுடன் சேர்த்து பிசைந்து சூடாகச் சாப்பிடவும்.
இடுப்பு வலியை நன்றாகக் கேட்கும்.

Temple Tamarind Rice கோயில் புளியோதரை

It is an easy to prepare sour to taste rice variety. Can be carried as packed food, during the journey.

கோயில் புளியோதரை

தேவையான பொருட்கள்:

  • வெந்த சோறு: ஒரு கப்
  • புளி: எலுமிச்சை அளவு
  • கடுகு, எள், வெந்தயம்: முறையே ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் கீற்று: ஒன்று
  • வரமிளகாய்: ஐந்து
  • வெல்லம்: சிறு துண்டு
  • கடலைப் பருப்பு, மஞ்சள், முந்திரி, நிலக்கடலை (வேர் கடலை), நல்லெண்ணெய்: சிறிதளவு
செய்முறை:


  • ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணையைக் காயவிட்டு, கடுகை வெடிக்கச்செய்து, கடலைப் பருப்பு, எள், மிளகாய், மஞ்சள், பெருங்காயம் போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி, உப்பைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
  • வெந்தயத்தை வெறுமனே வறுத்து, பொடியாக்கி, அதில் முந்திரி, தோல் நீக்கப்பட்ட வேர் கடலை, தேங்காய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து, கொதித்துக் கொண்டு இருப்பதில் சேர்த்துக் கலந்து விடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  • உப்பு, புளி, உறைப்பு நன்றாகச் சார்ந்த பின்பு நல்ல ருசியாக இருக்கும்.

Tomato rasam தக்காளி ரசம்

Tomato Rasam is an easy to prepare soup like tasty liquid food, taken with rice.



தேவையான பொருட்கள்:


  • துவரம் பருப்பு: நூறு கிராம்
  • தக்காளிப் பழம்: நூறு கிராம்
  • புளி: ஒரு நெல்லிக்காய் அளவு
  • மிளகு: ஒரு தேக்கரண்டி
  • வரமிளகாய்: ஐந்து
  • சீரகம்: ஒரு தேக்கரண்டி
  • மல்லி: ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம்: ஒரு சிறிய துண்டு
  • வெந்தயம்: அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை: சிறிதளவு
  • கொத்தமல்லி: சிறிதளவு
  • மஞ்சள் தூள்: சிறிதளவு
  • நல்லெண்ணெய்: சிறிதளவு

செய்முறை:


  • கால் படி தண்ணீரில் பருப்பை வேகவிடவும்.
  • வெந்தபின்பு மஞ்சள் தூள், நல்லண்ணெய் சேர்க்கவும்.
  • பருப்பு கரைந்ததும் புளியைக் கரைத்து விடவும்.
  • பின்பு மிளகாய், மிளகு, மல்லி, சீரகம், ஆகியவற்றைப் போடி செய்து போடவும்.
  • தக்காளிப் பழத்தையும் நறுக்கிப் போடவும்.
  • கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு, ஒரு கொத்தி கொதித்ததும் இறக்கி விடவும்.

Athirasam / அதிரசம்

Athirasam is a very good sweet dish. It is a delicious and great dessert liked by all.

Ingredients:
  • Raw Rice (colam rice) - ½ kg
  • Jaggery - 1/4 kg
  • Edible oil for deep frying – As required
  • Cardamom powder – 1 tsp
  • Dry ginger powder – 1 tsp
Method of preparation:

  • Soak rice in water for about 3 hours.
  • Decant the water and partially dry the rice.
  • Grind into powder using mixer-grinder, sieve and get fine powder.
  • Prepare syrup (pagu) by boiling jaggery with required water.
  • Filter the syrup and continue boiling and stirring to wire like consistency (kambi padham).
  • Mix cardamom powder and dry ginger powder with the jaggery syrup.
  • Let it cool very well and thoroughly mix it with the powdered rice so as to make dough.
  • The dough will become thicker on further cooling preferably over night.
  • Pat the dough into discs and deep fry in oil till brown.
  • Serve hot or cold.
http://tamilhomerecipes.blogspot.com/2008/10/athirasam-adhirasam-sweet-dish-as.html


அதிரசம், ஒரு மிகவும் சுவையான இனிப்புப் பண்டம் ஆகும். நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.


செய்முறை:


  • கால் கிலோ பச்சரிசியை ஊறப்போட்டு, இடித்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • தூளாக்கப்பட்ட வெல்லம் கால் கிலோ எடுத்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் சூடாக்கிப் பாகு காய்ச்சவும்.
  • பாகு கொதித்துக் கெட்டியானதும், அரிசி மாவைச் சேர்த்து கிளறவும்.
  • அப்போது பத்து ஏலக்காய்களைக் கொண்டு செய்யப்பட்ட பொடியையும் சேர்க்கவும்.
  • பிசையவும்.
  • ஒரு நாள் உறியில் வைத்திருந்து மறுநாள் எடுத்து ஒவ்வொன்றாக உள்ளங்கையில் அகலமான வடை போலத் தட்டி, இருப்புச் சட்டி என்ற வாணலியில் கொதிக்கும் நெய்யில் போட்டு, கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் எடுத்து விடவும்.


சுவையான அதிரசம் எல்லோருக்கும் பிடிக்கும்.

Tuesday, August 11, 2009

Mudakathan Keerai Kashayam & Dosai

Mudakkatraan keerai (Cardiospermum halicababum). It is also called Mudakkaththaan keerai, Mudakaththaan keerai, Mudakathan keerai, Indravalli (Sanskrit), etc.
It is a herb (green leaves), used for treating Gout , Rheumatoid arthritis, Skin diseases, Cough, Nervous disorders, Piles, Dysentery, Diarrhea, etc.
It helps in curing joint pain.
It is bitter to taste. But the bitterness will reduce on cooking.

Mudakkatraan keerai Kashayam:

It is very effective to reduce rheumatic pain.


  • Boil a handful of Mudakathan Keerai along with a tablespoon of jeera and a pinch of turmeric powder in two cups of water for about ten minutes.
  • Strain and drink.
Mudakathan Keerai Dosai

  • Soak two cups of parboiled rice in water for about five hours.
  • Drain the excess water.
  • Grind with two handful of mudakathan keerai and a tsp of salt to a fine and thick pasty batter.
  • Add required amount of water, stir and make the batter thin.
  • Heat pan (Dosai kal / tawa) and grease it with oil.
  • Pour one ladle of batter and spread.
  • Pour one teaspoon of oil around the edge of dosai.
  • Turn the dosai upside down, so as to be cooked both the sides.

The keerai can also be ground to paste and mixed well with common dosa batter.


முடக்கத்தான் கீரை / முடக்கு அற்றான் கீரை / முடக்கற்றான் கீரை.

  • மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
  • முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இந்தக் கீரையில் தோசையும் சுடலாம், துவையலும் அரைக்கலாம்.
  • சிறிது கசக்கும். ஆனால் சமைத்த பின் அவ்வளவாகத் தெரியாது.

முடக்கத்தான் கீரை தோசை:

  • இரண்டு கப் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசை போல் சுட்டு சாப்பிடலாம்.
  • இரண்டு கைப்பிடி கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து, தோசை சுட்டால், கசப்பு தெரியாது.
  • சட்னியுடன் சாப்பிட, சுவையாக இருக்கும்.



Sunday, August 9, 2009

Instant Kichadi / திடீர் கிச்சடி

Enjoy having this delicious rice-lentil food with curd / yogurt, mango pieces etc.

Ingredients:


  • Rice: 2 cups
  • Green gram lentil (dal): 1 cup
  • Mustard: 1 tsp
  • Curry leaves: A few
  • Green chili: 3
  • Onion: 1
  • Tomato: 1
  • Garlic: A few
  • Coriander leaves: As required
  • Cooking oil / Edible oil: As required
  • Turmeric powder: A little
  • Ghee / Clarified butter: As required
  • Salt: As required
Method of preparation:

  • Heat oil in a pressure cooker.
  • Add muster, curry leaves, chopped green chili, garlic, onion and tomato respectively and sauté for about two minutes.
  • Add six cups of water.
  • Let the contents boil.
  • Add salt and turmeric powder.
  • Add rice and lentil (dal).
  • Close the lid and cook for three whistle.
  • Pour a little ghee and decorate with some coriander leaves.
தேவையான பொருட்கள்:
  • அரிசி: இரண்டு கப்
  • பாசிப் பருப்பு: ஒரு கப்
  • கடுகு: ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை: சிறிதளவு
  • பச்சை மிளகாய்: மூன்று
  • பெரிய வெங்காயம்: ஒன்று
  • தக்காளி: ஒன்று
  • பூண்டு: சிறிதளவு
  • கொத்தமல்லி: தேவையான அளவு
  • சமையல் எண்ணெய்: தேவையான அளவு
  • மஞ்சள் தூள்: சிறிதளவு
  • உப்பு: தேவையான அளவு
  • நெய்: தேவையான அளவு
செய்முறை:
  • குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
  • அதில் கடுகு, கறிவேப்பிலை, வெட்டி வைக்கப்பட்ட மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து சுமார் இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • அத்துடன் ஆறு கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • கலவை கொதிக்கும் போது, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • பிறகு அரிசி மற்றும் பாசிப் பருப்பை அதனுடன் சேர்த்து, மூன்று விசில் வரை வேக விடவும்.
  • சிறிதளவு கொத்தமல்லி தூவி , நெய் விட்டு, பரிமாறவும்.

தயிர், ஊறுகாய், மாங்காய், வறுத்த மோர் மிளகாய் இவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Friday, August 7, 2009

Village Ragi / Finger millet porridge, கிராமத்து கேப்பை கூழ்

It is an energetic non alcoholic drink, Rich in calcium and the amino acid methionine.It is also called Keppai koozh, Kezhvaragu koozh, etc., suitable to take at any time especially during summer, with pickle, mango pieces, chili or onion.

Method of preparation:


  • Mix water with a cup of finger millet flour.
  • Let it ferment for one full day.
  • Boil ¼ cup of broken rice in a vessel.
  • Add this fermented mixture.
  • Stir constantly under low flame.
  • Remove from flame when it is cooked fully.
  • The fully cooked porridge will not stick the wet finger while testing.
  • We can drink it by adding water and salt, curd and salt or buttermilk and salt on the same day or on the next day.

கேப்பைக் கூழ் ஒரு மிகவும் ருசியான, அருமையான உணவாகும். சூடாகவும் சாப்பிடலாம், குளிரவைத்தும் சாப்பிடலாம், புளிக்கவைத்தும் சாப்பிடலாம். புளிக்கவைத்தால் சுவை மிகும். தொட்டுக்கொள்ள ஊறுகாய், மாங்காய், வறுத்த மோர் மிளகாய் இப்படி எதுவானாலும் இதற்கு எற்றதேயாகும்.



தேவையான பொருட்கள்:

  • கேப்பை மாவு / ராகி மாவு / கேழ்வரகு மாவு: ஒரு கப்
  • அரிசிக் குருணை / நொய்: கால் கப்
  • தயிர்: தேவையான அளவு
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:

  • கேப்பை மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.
  • ஒரு நாள் முழுவதும் புளிக்கட்டும்.
  • ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க விடவும். பிறகு குருணை சேர்த்து வேக விடவும்.
  • வெந்ததும், புளித்த மாவை ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • தீ சற்று குறைவாஇருக்கட்டும்.
  • கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி விட வேண்டும்.
  • இதை அப்படியே கரைத்துக் குடிக்கலாம்.
  • மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்துக் கரைத்தும் குடிக்கலாம் .

Saturday, August 1, 2009

Tasty tomato pickle / சுவையான தக்காளி ஊறுகாய்

This is a very delicious and tasty pickle, suitable to enjoy with purotta, paratha, parantha, puri, chappati, chappathi, idli / idly, dosai / dosa, curd rice, biriyani / briyani.

Ingredients:


  • Tomato: 1 Kg
  • Garlic: 150 gm
  • Turmeric powder: As required
  • Chili powder: As required
  • Fenugreek powder (Methi): 1 tbsp
  • Asafetida (Hing): a little
  • Gingelly oil (sesame oil / edible oil / til ka tel): for sauté
  • Mustard (Sarson / Rai): for sauté
  • Salt: As required

Method of preparation:

  • Wash tomatoes and dry them.
  • Remove skin from garlic.
  • Grind them together in a mixer.
  • Add salt and mix.
  • Pour this on a wide plate and keep under hot direct sunlight so as to get it dry like jam.
  • Heat and stir this in a sauce pan (Kadhai).
  • After some time add turmeric powder, chili powder, fenugreek powder (methi powder) and asafetida (hing).
  • Stir and turn the stove off.
  • Use another sauce pan for sauté and mix well.
தேவையான பொருள்கள்:

  • நன்றாகப் பழுத்த தக்காளி:ஒரு கிலோ
  • பூண்டு: நூற்றைம்பது கிராம்
  • மஞ்சள் தூள்: தேவையான அளவு
  • மிளகாய் தூள்: தேவையான அளவு
  • வெந்தயத் தூள்: ஒரு மேஜைக் கரண்டி
  • பெருங்காயத்தூள்: சிறிதளவு
  • உப்பு: தேவையான அளவு
  • தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு

செய்முறை:

  • தக்காளிப் பழங்களுடன் தோல் உரிக்கப்பட்ட பூண்டுகளை அரைக்கவும்.
  • உப்புப் போட்டுக் கலக்கி, அகலமான தட்டில் ஊற்றி, நன்கு வற்றும் வரை கொளுத்தும் வெயிலில் காய வைக்கவும்.
  • அடுப்பு பற்றவைத்து இருப்புச் சட்டியை சூடேற்றி, காயவைக்கப்பட்டதை இட்டு நன்றாகக் கிண்டவும்.
  • தொக்கு போல வரும். அப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்துக் கலக்கி, அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  • இதில், இன்னொரு இருப்புச்சட்டியில் தாளித்ததை விட்டு, கலந்து வைக்கவும்.

இதுவே சுவையான தக்காளி ஊறுகாய். புரோட்டா, பூரி, தோசை, இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம், ஆமை வடை, உளுந்த வடை, இப்படி எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.

Mushroom Masala / Kaalaan purattal / காளான் புரட்டல் / காளான் மசாலா

Mushroom masala tasts good with chapati (Indian bread), paratha (purotta), puri, etc.

காளான் புரட்டல் (காளான் மசாலா)
தேவையான பொருள்கள்:

  • காளான்: 500 கிராம்
  • வெங்காயம்: ஒன்று
  • தக்காளி: ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது: பாதி தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்: ஒரு தேக்கரண்டி
  • சீரகம்: ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய்: தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு: ஒரு தேக்கரண்டி
  • உப்பு: தேவையான அளவு

செய்முறை:


  • இளஞ் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, காளானைப் பதினைந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுக்கவும்.
  • கழுவவும்.
  • துண்டுகளாக நறுக்கவும்.
  • அதே போல வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கவும்.
  • இருப்புச் சட்டியில் (ஹிந்தியில் சொல்வதென்றால் கடாயில்) எண்ணையைச் சூடாக்கி, சீரகத்தைப் போட்டுத் தாளிக்கவும்.
  • வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
  • அதனுடன் தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
  • மொத்தமாக எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்.
  • பிறகு மிளகாய்த்தூளை போட்டு லேசாக வதக்கி, காளானையும் உப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் மூடி வைத்து வேகவிடவும்.
  • காளானிலிருந்து நீர் வெளியேறும்.
  • நீர் சுண்டும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடாக, ரொட்டி, சப்பாத்தி, புரோட்டா போன்றவைகளுடன் பரிமாறவும்.