It is a very delicious extract, added with cooked rice and taken with great pleasure. வற்றல் குழம்பு (வத்தக் குழம்பு) தேவையான பொருட்கள்:
புளி: எலுமிச்சையளவு
வெள்ளைப் பூண்டு: ஆறு பல்
சின்ன வெங்காயம்: 100 கிராம்
கறிவேப்பிலை: சிறிது
நல்லெண்ணெய்: கொஞ்சம்
வெந்தயம்: 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்:2 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1/4 தேக்கரண்டி
செய்முறை:
புளியைக் நீரில் ஊறப்போட்டு, கரைத்துக் கொள்ளவும்.
பூண்டை உரித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
இருப்புச்சட்டி என்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையைச் சிறிது ஊற்றி, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியபின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி விடவும்.
சோறு (சாதம்) சாப்பிடும் போது சாம்பாருக்கு அடுத்ததாக இந்த வற்றல் குழம்பு மிகவும் சுவை (ருசி) கூட்டும்.
பிறகு ரசம், பாயாசம், தயிர் அல்லது மோர் என்று சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதை நினைத்தாலே இனிக்கிறது.
The varieties and other names of this dessert falooda are phalooda, faluda, faloodeh, nam manglak, kurd, and falooda kulfi combination with a variety of flavors like rose, saffron (kesar / kungumappoo / kunkuma poovu), chocolate, fig, mango, orange etc. Some times milk is also added. It is popular in India, Myanmar, Iran, Iraq, Pakistan, and other parts of the world.
Falooda is usually prepared from vermicelli of arrowroot, basil seeds, sugar, ice cream, tutti frutti etc.
இது எல்லோருக்கும் பிடித்த அருமையான சுவையான ஸ்வீட் ஆகும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு: இரண்டு கப்
சீனி: ஒன்றரை கப்
முந்திரிப் பருப்பு: பத்து
கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை: பத்து
ஏலக்காய்ப் பொடி: கால் தேக்கரண்டி
சமையல் சோடா: ஒரு சிட்டிகை
நெய்: இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்: அரை லிட்டர்
கலர் (மஞ்சள்): ஒரு சிட்டிகை (விரும்பினால் மட்டும்)
உப்பு: ஒரு சிட்டிகை
செய்முறை:
கடலை மாவுடன் உப்பையும் சமையல் சோடாவையும் முக்கால் கப் தண்ணீரையும் சேர்த்து, தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, அரிகரண்டி உதவியுடன் மாவை ஊற்றி பூந்தி செய்து கொள்ளவும்.
மற்றொரு சட்டியில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் சீனியையும் ஏலக்காய்ப் பொடியையும், தேவைப்பட்டால் கலரையும் போட்டு சீனி நன்கு கரையும் வரை கிண்டவும்.
பின்பு அதில் பூந்தியைப் போட்டுக் கிளரவும்.
அதன் மேல் நெய்யில் வறுபட்ட கிஸ்மிஸ்ஸையும் முந்திரியையும் போட்டு, சூடு ஆறியதும் மிக்சியில் லேசாக ஒரு நொடி அரைத்து, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு வேண்டிய சைசில் உருண்டை பிடிக்கவும்.
தீபாவளியன்று நாம் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகளைச் சாப்பிடுவோம். நம் வீட்டு பதார்த்தங்கள் மட்டும் அல்லாது சுற்றியுள்ள வீட்டுப் பதார்த்தங்களையும் சாப்பிட நேரும். இதற்காகவே அக்காலத்தில் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து என்பதை ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்கள். இது அஜீரணத்தைப் போக்கி நல்ல செரிமானம் கொடுக்கும். அதிகாலையிலேயே ஒரு நெல்லிக்காய் அளவு இதைச் சாப்பிடக் கொடுப்பார்கள்.
தீபாவளி லேகியத்தைப் பலவிதங்களில் செய்வார்கள்.
மிகவும் சுருக்கமான முறை:
சுக்கை நன்கு பொடியாக்கி, சலித்து, அதில் வெல்லப் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் கலந்து உருட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது சாப்பிடலாம். மற்ற முறைகள்:
தேவையான பொருட்கள்:
இஞ்சி: ஒரு துண்டு
மல்லி (தனியா): ஒரு கப்
சீரகம்: அரை கப்
நெய்: மூன்று தேக்கரண்டி
வெல்லம்: ஒரு கப்
செய்முறை:
மல்லி, சீரகம்,இஞ்சி இம்மூன்றையும் தண்ணீர் விட்டு மிக நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை சேர்த்துக் கொதிக்க விட்டு, நெய்யைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்கவும். நன்கு இறுகியவுடன் இறக்கி, பத்திரப்படுத்திக் கொள்ளவும். (சிறிது ஏலக்காய் பொடியை, கடைசியாகத் தூவியும் இறக்கலாம். சூடு ஆறிய பின்பு தேன் கலந்தும் சாப்பிடலாம்.) சித்தரத்தை, ஜாதிக்காய், அதிமதுரம், மிளகு, ஓமம், சுக்கு, கண்டந்திப்பிலி போன்றவற்றையும் அரைக்கும்போது சேர்த்தால் நல்ல பயன் உண்டு.
It is an easy to prepare sour to taste rice variety. Can be carried as packed food, during the journey. கோயில் புளியோதரை தேவையான பொருட்கள்:
வெந்த சோறு: ஒரு கப்
புளி: எலுமிச்சை அளவு
கடுகு, எள், வெந்தயம்: முறையே ஒரு தேக்கரண்டி
தேங்காய் கீற்று: ஒன்று
வரமிளகாய்: ஐந்து
வெல்லம்: சிறு துண்டு
கடலைப் பருப்பு, மஞ்சள், முந்திரி, நிலக்கடலை (வேர் கடலை), நல்லெண்ணெய்: சிறிதளவு
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணையைக் காயவிட்டு, கடுகை வெடிக்கச்செய்து, கடலைப் பருப்பு, எள், மிளகாய், மஞ்சள், பெருங்காயம் போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி, உப்பைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
வெந்தயத்தை வெறுமனே வறுத்து, பொடியாக்கி, அதில் முந்திரி, தோல் நீக்கப்பட்ட வேர் கடலை, தேங்காய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து, கொதித்துக் கொண்டு இருப்பதில் சேர்த்துக் கலந்து விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
உப்பு, புளி, உறைப்பு நன்றாகச் சார்ந்த பின்பு நல்ல ருசியாக இருக்கும்.
Mudakkatraan keerai (Cardiospermum halicababum). It is also called Mudakkaththaan keerai, Mudakaththaan keerai, Mudakathan keerai, Indravalli (Sanskrit), etc.
It is a herb (green leaves), used for treating Gout , Rheumatoid arthritis, Skin diseases, Cough, Nervous disorders, Piles, Dysentery, Diarrhea, etc.
It helps in curing joint pain.
It is bitter to taste. But the bitterness will reduce on cooking.
Mudakkatraan keerai Kashayam:
It is very effective to reduce rheumatic pain.
Boil a handful of Mudakathan Keerai along with a tablespoon of jeera and a pinch of turmeric powder in two cups of water for about ten minutes.
Strain and drink.
Mudakathan Keerai Dosai
Soak two cups of parboiled rice in water for about five hours.
Drain the excess water.
Grind with two handful of mudakathan keerai and a tsp of salt to a fine and thick pasty batter.
Add required amount of water, stir and make the batter thin.
Heat pan (Dosai kal / tawa) and grease it with oil.
Pour one ladle of batter and spread.
Pour one teaspoon of oil around the edge of dosai.
Turn the dosai upside down, so as to be cooked both the sides.
The keerai can also be ground to paste and mixed well with common dosa batter.
முடக்கத்தான் கீரை / முடக்கு அற்றான் கீரை / முடக்கற்றான் கீரை.
மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்தக் கீரையில் தோசையும் சுடலாம், துவையலும் அரைக்கலாம்.
சிறிது கசக்கும். ஆனால் சமைத்த பின் அவ்வளவாகத் தெரியாது.
முடக்கத்தான் கீரை தோசை:
இரண்டு கப் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசை போல் சுட்டு சாப்பிடலாம்.
It is an energetic non alcoholic drink, Rich in calcium and the amino acid methionine.It is also called Keppai koozh, Kezhvaragu koozh, etc., suitable to take at any time especially during summer, with pickle, mango pieces, chili or onion. Method of preparation:
Mix water with a cup of finger millet flour.
Let it ferment for one full day.
Boil ¼ cup of broken rice in a vessel.
Add this fermented mixture.
Stir constantly under low flame.
Remove from flame when it is cooked fully.
The fully cooked porridge will not stick the wet finger while testing.
We can drink it by adding water and salt, curd and salt or buttermilk and salt on the same day or on the next day.
This is a very delicious and tasty pickle, suitable to enjoy with purotta, paratha, parantha, puri, chappati, chappathi, idli / idly, dosai / dosa, curd rice, biriyani / briyani. Ingredients:
Tomato: 1 Kg
Garlic: 150 gm
Turmeric powder: As required
Chili powder: As required
Fenugreek powder (Methi): 1 tbsp
Asafetida (Hing): a little
Gingelly oil (sesame oil / edible oil / til ka tel): for sauté
Mustard (Sarson / Rai): for sauté
Salt: As required
Method of preparation:
Wash tomatoes and dry them.
Remove skin from garlic.
Grind them together in a mixer.
Add salt and mix.
Pour this on a wide plate and keep under hot direct sunlight so as to get it dry like jam.
Heat and stir this in a sauce pan (Kadhai).
After some time add turmeric powder, chili powder, fenugreek powder (methi powder) and asafetida (hing).